இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில்
சாம்பியன் வீரர்களை உருவாக்கும் வாய்ப்பு இல்லை
:
சனத் ஜெயசூரிய வேதனை
இலங்கை அணியில் முன்னாள் சாம்பியன் வீரர்களைப் போன்று சிறந்த
வீரர்களை தயார் செய்ய முடியாது என்று சனத் ஜெயசூரிய வேதனை தெரிவித்துள்ளார்
1996-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக 50 ஓவர்
உலகக்கோப்பையை கைப்பற்றி இலங்கை சாதனைப்படைத்தது. அப்போது இலங்கை அணியில் அர்ஜுனா ரணதுங்க,
சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா, முரளீதரன் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள்.
மேலும் ஜெயவர்தன, சங்ககார, மகானாம போன்ற சாம்பியன் வீர்கள் அந்த
அணியில் இருந்தனர். ஆனால் தற்போது சங்ககார, ஜெயவர்தன ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு
பெற்றதும் இலங்கை அணி பலவீனம் அடைந்து காணப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
அந்த அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய
உள்ளார். இவர், முன்னாள் சாம்பியன் வீரர்களை போல் இனிமேல் இலங்கை அணியில் வீரர்களை
தயார் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சனத் ஜெயசூரிய கூறுகையில் ‘‘இலங்கை வீரர்களின் திறமைக்கு பஞ்சம் என்று நான் எக்காரணம் கொண்டும் கூறமாட்டேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த சாம்பியன் வீரர்களை போன்று சிறந்த வீரர்களை நம்மால் தயார் செய்ய முடியவில்லை.
பாடசாலை மற்றும் உள்ளூர் கட்டமைப்பில் குறைபாடு உள்ளதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் சிறந்த வீரர்களை உருவாக்கிய காலத்திலும் இதே கட்டமைப்புதான் இருந்தது. ஆகவே, எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். பின்னர் அதை சரி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment