வரக்காபொல ஆதார வைத்தியசாலையின்
ஆறு மாடி மருத்துவமனைக் கட்டிடம்
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது
வரக்காபொல
ஆதார வைத்தியசாலையின்
நவீன கருவிகளுடன்
கூடிய புதிய
ஆறு மாடி
மருத்துவமனைக் கட்டிடம் நேற்று 16 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்கள் சுகாதார
அமைச்சராக சேவையாற்றியபோது
அவரால் அடிக்கல்
நாட்டப்பட்ட இவ் மருத்துவமனைக் கட்டிடம் 1103 மில்லியன்
ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்
கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதன்
சத்திரசிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு
மற்றும் குறை
பிரசவ குழந்தை
பிரிவு என்பவற்றையும்
பார்வையிட்டார்.
அமைச்சர்களான
ராஜித சேனாரத்ன,
ரஞ்சித் சியபலாபிட்டிய,
இராஜாங்க அமைச்சர்
சம்பிக பிரேமதாச,
பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன உள்ளிட்ட
மக்கள் பிரதிநிதிகளும்,
மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி திருமதி.
எஸ்.எம்.என்.எஸ்.எம். மல்லவஆரச்சி
உள்ளிட்ட மருத்துவர்கள்,
தாதிகள் மற்றும்
மருத்துவமனை பணித்தொகுதியினர் இந் நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment