மூதூர்
வலயக்கல்விப் பிரதேசத்திற்குட்பட்ட
அதிபர்களை
மிரட்டி ஒப்பமா?
மேலதிக
ஒழுக்காற்று நடவடிக்கைக்காக
இணைப்புச்
செய்யப்பட்டஒருவர்
எவ்வாறு
வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்?
கிழக்கு
மாகாண ஆளுனரிடம் வேண்டுகோள்!
(முஹம்மட் அஸ்லம்)
மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் வகுப்பு
உத்தியோகத்தர் ஒருவர் எவ்வாறு மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்
என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுனரிடம் இலங்கை ஆசிரியர்
சங்கம், இலங்கை கல்வி
நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் என்பன கூட்டாக வேண்டுகோள்
விடுத்துள்ளன.
இது தொடர்பான கோரிக்கைக் கடிதத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம்
சார்பாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை
அதிகாரிகளின் சங்கச் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி
வைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற மோசடியொன்று
தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டவர் அவ்விசாரணை முடிவுறுத்தப்படாமல் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளராக அவ்வதிகாரி கடந்த ஆட்சிக்காலத்தில் நியமனம்
செய்யப்பட்டார்.
பின்னர் அவ்வதிகாரி மூதூர் வலயத்தில் இடம்பெற்ற அதிபர்களின்
எதிர்ப்பை அடுத்து கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு மிண்டுமொரு தடவை இணைப்புச்செய்யப்பட்டார்.
தற்பொது இவ்வதிகாரிக்கு எதிராக முறைசார்ந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.
அண்மையில் தாய்லாந்திற்கான வலயக்கல்விப் பணிப்பாளர் கல்விச்சுற்றுலாவில் இவர்
ஒழுக்காற்றுக்காரணுங்களுக்காக கலந்துகொள்ளாமல் தடுக்கப்பட்டார்.
மூதூர் அதிபர்கள் இவர் வலயக்கல்விப் பணிப்பாளராக
நியமிக்கப்பட்டமையை எதிர்த்தமைக்காக இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரத்தைச்
சேர்ந்த 12 அதிபர்களுக்கான
இலங்கை அதிபர் சேவை முதலாம் தரப்பதவி உயர்வை கிடைக்க விடாமல் தடுத்து அதிபர்களைப்
பழிவாங்கினார்.
தான் முறையற்ற விதத்தில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் குறைந்த
தரப் பதவியான உதவிச் செயலாளராக இணைப்புச் செய்யப்பட்டிருப்பதனைத் தெரிவித்து
கல்முனை மேல் நீதிமன்றத்தில் இவரால் வழக்கொன்று தொடுக்கப்பட்டபோது என்ன
காரணத்திற்காக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டார் எனும்
விடயம் கல்வியமைச்சு, கிழக்கு மாகாணப்
பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாண
சட்டத்துறை அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டது. இவ்வாறு மூடி மறைக்கப்பட்டதன்
பின்னணியில் இருந்த அதிகாரிகள் யார்? என்ற விடயம் வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும்.
இது இவ்வாறிருக்க இவரை இடமாற்றம் செய்யுமாறு சுமார் 1000ற்கு மேற்பட்ட மூதூர், ஈச்சிலம்பற்றை, தோப்பூர், கிளிவெட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த தமிழ்,
முஸலிம் ஆசிரியர்கள்
ஒன்றிணைந்து ஒப்பமிட்டு ஆளுனருக்கு மகஜர் சமர்ப்பிக்க ஆயத்தங்களை செய்து வருகையில்
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் முக்கிய ஆதரவாளரான சிலர்
மூதூர் வலய அதிபர்களை மிரட்டி ஒப்பமிடுமர்று கேட்பதாகவும் இதற்கு மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர் ஆதரவளிப்பதாகவும் அறிய வருகிறோம். இந்த ஈனச்செயலை
வன்மையாகக் கண்டித்து இவ்வாறான மிரட்டல்களிலிருந்து வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூரும்,
அவரது அடிவருடிகளும்
விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை
அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களையும், அதிபர்களையும் துன்புறுத்தி அவமதிப்புச் செய்யும் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளரை அங்கிருந்து அகற்றி அவரது அடாவடித்தனங்களை முடிவுக்குக்
கொண்டு வந்து அவரால் அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க வேண்டுமென
கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் பாரிய ஆசிரிய தொழிற்சங்கப் போராட்டமொன்று
முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்பதையும் சகல தரப்பினருக்கும்
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
V.vy;.vk;.Kf;jhh; - 0772301500
(nrayhsh;> SLEAS Eastern province union)
N[hrg; ];lhypd; - 0718148868
(nrayhsh;> Ceylon Teachers union)
0 comments:
Post a Comment