அரனாயக்கவில் முஸ்லிம் மீடியா போரத்தின்

ஊடகக் கருத்தரங்கும் கவிதை நூல் வெளியீடும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் ஊடக கருத்தரங்கு மற்றும் அரனாயக்க திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மிஸ்னா மிர்ஷாதினால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்25ஆம் திகதி சனிக்கிழமை அரனாயக்க பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை21ஆம் நூற்றாண்டில் நவீன ஊடகம் என்ற தொனிப்பொருளில் வில்பொல அரனாயக்க அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் ஊடக கருத்தரங்கும் மாலை 4.00 மணிக்கு அரனாயக்க திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மேற்படி பாடசாலையின் மாணவி மிஸ்னா மிர்ஷாதினால் எழுதப்பட்டவிழித்திடு சமூகமேஎன்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் மீடியா போரத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் என்..எம். ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.
மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் மற்றும் திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்..எம்.எம்.சாபிரீன் தலைமையில் மாலை நடைபெறவுள்ள மேற்படி கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச். . ஹலீம் பிரதம அதிதியாகவும், முன்னாள் பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க, .தே.கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிமல் ஜயசிங்க, பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச கலாசார நிலையத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எஸ். எல். நௌபர், அரனாயக்க பிரதேச செயலாளர் பைஸல் ஆப்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினர் மத்தியில் ஊடகத்துறை தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தவும் தரமான இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடனும் நாட்டிலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களை வளவாளர்களாக கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் பயிற்சி திட்டத்தின் ஓர் அங்கமாக இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில், அரனாயக்க பிரதேசத்திலுள்ள திப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயம்தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயம அல் ஜலால் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நன்மையடைவுள்ளனர். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மீடியா போரத்தின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதில் அலி சப்ரி முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top