கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபரை
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில்
கடமையேற்குமாறு பணிப்புரை
(முஹம்மட் அஸ்லம்)
கல்முனை
ஸாஹிறாக்கல்லூரி தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபர்
பீ.எம்.எம்.பதுர்தீன்
என்பவரை அவரது
நிரந்தர சேவை
நிலையமான கல்முனை
வலயக்கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக கடமையேற்குமாறும் இல்லையேல் சேவை நீக்க உத்தரவு
வழங்கப்படும் எனவும் கிழக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளர்
திரு. அசங்க
அபேவர்த்தன கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை
கல்வி நிருவாக
சேவையின் மூன்றாம்
வகுப்பு அதிகாரியான
பதுர்தீன் மாகாண
அரச சேவைக்கு
விடுவிக்கப்பட்ட ஒரு உத்தியோகத்தராவார். இவர் 2014ம்
ஆண்டு சட்டவிதிமுறைகளுக்கு
முரணாக கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலைக்கு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரால் தற்காலிகமாக
நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை
எதிர்த்து இலங்கை
மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியக் காரியாலயத்தில் இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
கிழக்கு மாகாண
சங்கம் முறைப்பாடொன்றை
செய்திருந்ததன் பேரில் இது தொடர்பான விசாரணைகள்
இடம்பெற்றன.
விசாரணையின்
முடிவில் குறித்த
தற்காலிக அதிபர்
ஜனவரி 01ம்
திகதியுடன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை
செய்யுமாறு உத்தரவு வழங்குவதாக கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சும், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரும் இணங்கிக்
கொண்டனர். இதனையடுத்து
கல்முனை வலயக்கல்விப்
பணிப்பாளர் அவரை அறிக்கை செய்யுமாறு கடிதம்
அனுப்பியும் அறிக்கை செய்யாத நிலையில் ஜனவரி
மாதத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன்
பின்னர் அவர்
ஜனவரி சம்பளத்தை
வழங்குமாறும், பெப்ரவரி மாதம் தான் அறிக்கை
செய்வதாகவும் கேட்டுக் கொண்டதற்கமைய மீண்டும் அவருக்கான
சம்பளம் வழங்கப்பட்டது.
தற்போது பெப்ரவரி
மாதத்திற்கான சம்பளம் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக
கல்முனை கல்வி
வலயத்தில் அறிக்கை
செய்யுமாறு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை
வழங்கியுள்ளார்.
இவர்
மத்திய அரசு
சேவைக்கு தன்னை
விடுவிக்குமாறு கோரிய போதும் விடுவிக்க முடியாதென
கிழக்கு மாகாணக்கல்விப்
பணிப்பாளரும், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சும், ஆளுனரும்
தெரிவித்துள்ளனர்எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment