புங்குடுதீவு "தாயகம் சமூக சேவையகம்"
அமைப்பின்
நிர்வாகக் குழுவின் கூட்டம்..!
புங்குடுதீவு
பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள "தாயகம் சமூக சேவையகம்" அமைப்பின்
நிர்வாகக் குழுவின் கூட்டம் நேற்றையதினம் (19.02.2017)
நடைபெற்றது. கடந்த 2005ஆம் ஆண்டு
முதல், அமரர்களான திரு. திருமதி சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின்
ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட "தாயகம் சொக்கலிங்கம் அகடமி"யானது கடந்த
ஐந்து வருடங்களுக்கு முன்பாக "தாயகம் சமூக சேவையகமாக" மாற்றப்பட்டு
செயலாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இதன்
நிர்வாகக் குழுவானது, நேற்றைய 1 1தினம் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின்
பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்டது. இதில் இதுவரை காலமும் பிரதம ஆலோசகராக இருந்த
திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டதோடு போசகராக
திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
தெரிவு
செய்யப்பட்டவர்களின் விபரம்:
போசகர் -
திரு. எஸ்.கே சண்முகலிங்கம் (சமூக சேவகர், முன்னாள் அதிபர்)
தலைவர் -
திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை (சமூக சேவகர்)
செயலாளர் -
செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (சமூக ஆர்வலர் ஏழாலை)
பொருளாளர் -
திருமதி யோகநாதன் மரிஸ்ரெலா
உப தலைவர் -
செல்வி சேனாதிராசா சாந்தினி
உப செயலாளர்
- செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா)
***
நிர்வாக சபை உறுப்பினர்களாக:-..
செல்வி.
மேரிஆன் மரியதாஸ் (கயானி)
செல்வன்.
நடராசா நவநேசன்
செல்வி.
மதுமிதா வேதநாயகம்
செல்வி.
அனுஷா சந்திரபாலன்
செல்வன்.
சன்சியோன் அன்ரன் தாவீது
செல்வன்.
ஜான்றோசன் அருள்தாஸ் ஆகியோரும்,
எண்
பார்வையாளராக (கணக்குப் பரிசோதகர்)..-
திருமதி
குகநேசன் மஞ்சுளா அவர்களும்,
பிரதம
ஆலோசகராக...-
புங்குடுதீவின்
மண்ணின் மைந்தரான திரு. லட்சுமணன் இளங்கோவன் (சமூக சேவகர், வட மாகாணசபை
ஆளுநரின் செயலாளர்) அவர்களும்m
ஆலோசகராக..-
திரு.
கணபதிப்பிள்ளை வாகீசன் (கிராம சேவகர்) அவர்களும்
தெரிவு
செய்யப்பட்டார்கள்.
மேற்படி
"தாயகம் சமூக சேவையகம்" அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும்
எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கருத்துப் பரிமாறல்கள் மற்றும்
கலந்துரையாடலைத் தொடர்ந்து எதிர்வரும் பங்குனி (மார்ச்) மாதம் 18ஆம் 19ஆம்
திகதிகளில் "புங்குடுதீவின் அனைத்து விளையாட்டுக் கழகங்களில்" இருந்தும், இருபது
வயதுக்குட்பட்டவர்களை இணைத்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியை நடாத்துவதெனவும்
தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி
விளையாட்டுப் போட்டியில் அனைத்து விளையாட்டுக் கழகங்களில் இருந்தும் கலந்து
கொள்வோர் இருபது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்க வேண்டுமெனவும், மேற்படி
விளையாட்டுப் போட்டியை கரந்தலி அன்னை வேளாங்கன்னி மைதானத்தில் நடாத்துவதென்றும்
தீர்மானிக்கப்பட்டது.
மேலும், முதல்நாளான
மார்ச் 18ஆம் திகதி அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான உதைபந்தாட்டப் போட்டியினை
நடாத்துவதோடு மறுதினமான மார்ச் 19ஆம் திகதி உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியையும் மற்றும் தாயகம்
அமைப்பினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் (கயிறு இழுத்தல், பனிஸ்
சாப்பிடுதல், கிடுகு பின்னுதல், பனையோலைக் கைப்பணிப் போட்டி) என்பவற்றை நடத்துவதென்றும், மேற்படி
விளையாட்டுப் போட்டியின் இறுதியின் இறுதியில் முதல்நாள் நடைபெற்ற உதைபந்தாட்டப்
போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியினை நடாத்துவதோடு, அதனைத்
தொடர்ந்து பரிசளிப்பு விழாவினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி
மார்ச் 19ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர் திரு. இலட்சுமணன் இளங்கோவன்
அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் திரு. விந்தன் கனகரத்தினம், திரு.
பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (சமூக ஆர்வலர்) ஆகியோரும் கலந்து
சிறப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை
எதிர்வரும் 24.02.2017 (அடுத்த வெள்ளிக்கிழமை) அன்று சிவராத்திரியினை முன்னிட்டு, வீராமலை
நாயன்மார் கோயிலிலும், பெருங்காடு கிராஞ்சியம்பதி சிவன்கோயிலிலும் "தாயகம் அமைப்பின்"
சார்பில், தாயகம் அமைப்பின் மாணவ, மாணவிகளினால் நடன விருந்து வழங்கப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. நன்றி.
இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி
முத்துக்குமாரு,
செயலாளர்,
"தாயகம் சமூக சேவை அகம்"
புங்குடுதீவு
-12.
0 comments:
Post a Comment