பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு
டிச. 08 இற்கு முன் அறிக்கை
இன்றையதினம் (2017.11.20) பிணை முறி தொடர்பான
ஜனாதிபதி ஆணைக்குழுவில்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க வாக்குமூலம் வழங்கியதை அடுத்து, பிணை
முறி தொடர்பான
விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன.
அந்த
வகையில், குறித்த
விடயம் தொடர்பான
விசாரணை அறிக்கை,
எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதிக்கு முன்னர்
ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று
(20) முற்பகல் 9.50 மணியளவில் பிணை
முறி விசாரணை
தொடர்பான ஜனாதிபதி
ஆணைக்குழுவில் ஆஜரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சுமார் ஒரு மணித்தியாலங்களின்
பின்னர் அங்கிருந்து
வெளியேறினார்.
குறித்த
பிணை முறி
கொடுக்கல் வாங்கல்
இடம்பெற்ற காலப்
பகுதியில், திறைசேரியின் மூலம் மேற்கொள்ளப்படும் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களை,
மிகவும் வெளிப்படையாகவும்,
சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளுவமாறு,
முன்னாள் மத்திய
வங்கி ஆளுநருக்கு
ஆலோசனை வழங்கியதாக
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க ஆணைக்குழுவில் இன்று தெரிவித்தார்.
அவ்வாறே,
சட்ட திட்டங்களுக்கு
அமைவாக அவை
இடம்பெறும் என தான் எதிர்பார்த்ததாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பிணை
முறி விசாரணை
ஆணைக்குழுவில் ஆஜரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்,
அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன,
சாகல ரத்நாயக்க,
திலக் மாரப்பன,
எரான் விக்ரமரத்ன,
அகில விராஜ்
காரியவசம், தயா கமகே, ருவன் விஜேவர்தன
உள்ளிட்டோர் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment