2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்
அம்பாறை மாவட்டத்தில் ஒரு கண்ணோட்டம்
இலங்கையில்
2011, மார்ச் 17, ஜூலை 23, அக்டோபர் 8 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் மொத்தம் உள்ள 335 உள்ளூராட்சிச் சபைகளில் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற்றன.
மொத்தம் 13.7 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபைக்கான 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 68,198 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தும் 46,580
பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர். இவ்வாறு வாக்களித்திருந்தவர்களில் 948 பேரின்
வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளைபெற்று 11 ஆசனங்களையும் இலங்கை
தமிழரசுக் கட்சி 9,911 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு 8,524 வாக்குகளைப்
பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2,805 வாக்குகளைப் பெற்று 1
ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
இது போன்று அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
தேசிய காங்கிரஸ் 11,821 வாக்குகளைப் பெற்று
8 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் 2,819 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
சம்மாந்துறை பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12,358 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10,078 வாக்குகளைப் பெற்று 3
ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி
1,995 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
பொத்துவில் பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7,457 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3,031 வாக்குகளைப்
பெற்று 2 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி
1,162 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
அட்டாளைச்சேனை பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12,512 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும்
ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4,991 வாக்குகளைப்
பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.
நிந்தவூர் பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10,355 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும்
ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,468 வாக்குகளைப்
பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
இலங்கை தமிழரசுக் கட்சி 4,284 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,364 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
இறக்காமம் பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3,196 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,952 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.
அக்கரைப்பற்று பிரதே சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
தேசிய காங்கிரஸ் 2,261 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 775 ,819 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
0 comments:
Post a Comment