2017.10.31 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. கம்பஹா மாவட்டத்தினுள் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிணைந்த
திண்ம கழிவு
முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கொம்போஸ்ட் செயற்தளத்தினை
நிர்மாணித்தல் (விடய இல. 06)
அதிக
ஜனநெரிசல் மிகுந்த
மற்றும் துரித
கைத்தொழில் மயமாக்கத்தின் விளைவினால் நகர திண்மக்
கழிவுகள் குவிகின்ற
கம்பஹா மாவட்டத்தில்
திண்மக் கழிவு
முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த
அமைச்சரவை ஏற்கனவே
அனுமதி வழங்கியுள்ளது.
அவ்வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா
மாவட்ட உள்ளூராட்சி
மன்றங்களின் மூலம் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை
முறையாக பிரித்து
ஊக்குகின்ற கழிவுகளை பயன்படுத்தி காபனீரொட்சைட்டு உரவகைகளை
உற்பத்தி செய்வதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்
முதற் கட்டமாக
உற்பத்தி நடவடிக்கைகளுக்கு
தேவைப்படுகின்ற காபனீரொட்சைட்டு உர உற்பத்தி செயற்தளமொன்றினை
துரித கதியில்
நிர்மாணிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும்
சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. சிறு மற்றும் நடுத்தர அளவிலான
தொழில்முயற்சிகளுக்கான கடன் வேலைத்திட்டத்தினை
தொடர்ந்தும் முன்னெடுத்தல் (விடய இல. 08)
இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை கட்டியெழுப்புவதற்காக கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இக்கடன் திட்டத்திற்கான கேள்விகள் அதிகரித்து வருகின்றமையினால் குறித்த வேலைத்திட்டத்தின் கால எல்லை நிறைவடைவதற்கு முன்னர், முழு நிதியினையும் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களுக்காக சலுகை கடன் தொகையினை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கடன் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அதிகமான பயனாளிகளுக்கு சலுகை அடிப்படையிலான கடன் திட்டத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான முறையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துக்கு வருவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. 2017ம் ஆண்டின் அரச நத்தார்
(கிறிஸ்மஸ்) தின நிகழ்வுகள் (விடய இல.
09)
2017ம் ஆண்டின் அரச நத்தார் தின நிகழ்வுகளை 'அன்பின் உறைவிடம் நத்தார்' எனும் தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் பதவி பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்துவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக
வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா
அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து
விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும்
இடையில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்
கொள்ளல் (விடய
இல. 14)
இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. விமான நகர அபிவிருத்திக்காக காணியினை பெற்றுக் கொள்ளல் (விடய
இல. 17)
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள ஏகல பிரதேசமானது இந்நாட்டு தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்து வருகின்றது. மேல்மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விமான நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு திட்டமிடப்படப்பட்டுள்ளது.
• பெறுமதி
ஒன்று சேர்க்கின்ற
தொழில்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தை ஸ்தாபித்தல்.
• சிறு
மற்றும் நடுத்தர
அளவிலான வியாபாரங்களுக்காக
ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.
• வர்த்தக
மற்றும் பொழுதுபோக்கு
விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றை ஸ்தாபித்தல்.
• ஊடக
நகரம்
• நடுத்தர
வர்க்கத்தினர்களுக்கான வீடு மற்றும்
பொது வசதிகள்
சேவை
மேற்கூறப்பட்ட
உப வேலைத்திட்டங்களை
உள்ளடக்கிய இவ்விமான நகர வேலைத்திட்டத்தினை அரச-தனியார் கூட்டின் அடிப்படையின்
கீழ் செயற்படுத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கு
அவசியமான, இலங்கை
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய
80 ஏக்கர் நிலப்பரப்பை
நகர அபிவிருத்தி
அதிகார சபைக்கு
ஒப்படைப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும்
மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் கௌரவ
பட்டலி சம்பிக்க
ரணவக்க அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. பண்டார நாயக்க சர்வதேச விமான
நிலையத்திற்கான நுழைவுப் பிரதேசத்தை விருத்தி செய்யும்
வேலைத்திட்டம் (விடய இல. 18)
பண்டார
நாயக்க சர்வதேச
விமான நிலையத்தினை
அண்டிய கொழும்பு
– நீர்கொழும்பு வீதியின் 18ஆவது மைல்கல்லுடன் தொடர்பான
பிரதேசத்தினை போக்குவரத்து, வியாபாரம் மற்றும் வர்த்தக
நடவடிக்கைகள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள்
உட்படும் அடிப்படையில்
அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள குறித்த
வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில்
பாரிய நகரம்
மற்றும் மேல்மாகாண
அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பட்டலி சம்பிக்க
ரணவக்க
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. 1981ம் ஆண்டு 75ம் இலக்க
கரும்பு ஆராய்ச்சி
நிலைய சட்டத்தினை
திருத்தம் செய்தல்
(விடய இல.
21)
கரும்பு
ஆராய்ச்சிக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதன் அபிவிருத்தி
தொடர்பிலும் கவனம் செலுத்தும் வகையில் 1981ம்
ஆண்டு 75ம்
இலக்க கரும்பு
ஆராய்ச்சி நிலைய
சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் பெருந்தோட்டக்
கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
08. வரட்சி காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்
நிலக்கீழ் நீர்
வளங்களை அபிவிருத்தி
செய்வதற்காக நிலக்கீழ் நீர் ஆராய்ச்சி உபகரணங்கள்
மற்றும் துளையிடும்
இயந்திரங்களை பெற்றுக் கொள்ளல் (விடய இல.
22)
வரட்சி காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கீழ் நீர் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக நிலக்கீழ் நீர் ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் துளையிடும் இயந்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கும், நிலக்கீழ் நீர் ஊற்றுக்களை பாவிப்பது தொடர்பில் நிர்ணயம் ஒன்றை மேற்கொள்வதற்கும் நீர்ப்பாசன மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு
உள்ளான விகாரைகளை
அபிவிருத்தி செய்தல் (விடய இல. 23)
2017ம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற
காலநிலை காரணமாக
அனர்த்தத்திற்கு உள்ளான விகாரைகளின் இழப்பீட்டுத்தொகை 113.87 மில்லியன் ரூபாய்கள்
என உரிய
மாவட்ட செயலாளர்களினால்
அறிக்கையிடப்பட்டுள்ளது. அப்பாதிப்புக்களை வழமையான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக
வேண்டி, ஐக்கிய
நாடுகளின் வெசாக்
தின நிகழ்வுகளுக்காக
வேண்டி புத்தசாசன
அமைச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்
113.87 மில்லியன் ரூபாய்களை செலவழித்து 09 மாவட்டங்களிலும் காணப்படுகின்ற
விகாரைகளை புனரமைப்பு
செய்வது தொடர்பில்
புத்தசாசன அமைச்சர்
கௌரவ காமினி
ஜயவிக்ரம பெரேரா
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
10. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய
நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வியாபார மற்றும்
பொருளாதார ஒத்துழைப்பினை
பலப்படுத்துதல் (விடய இல. 36)
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வியாபார மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. பல்கலைக்கழகங்களில் அடிப்படை
வசதிகளை அபிவிருத்தி
செய்தல் (விடய
இல. 39)
பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 2018-2019 காலப்பிரிவினுள் 380 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• பேராதெனிய
பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்
மின் மற்றும்
இலத்திரனியல் பொறியியல் கல்விப் பிரிவினை விரிவுபடுத்தல்.
• அநுராதபுரம்,
இலங்கை பிக்குமார்
பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற
வெளிநாட்டு பிக்குகளுக்காக வேண்டி இரு மாடிகளைக்
கொண்ட விடுதி
ஒன்றை நிர்மாணித்தல்
மற்றும் அப்பல்கலைக்கழகத்தின்
சுற்றுலா வீட்டினை
விருத்தி செய்தல்.
• கிழக்கு
பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தினை நிர்மாணித்தல்.
12. இலங்கையின் மேல் மாகாண வலயத்தினுள்
இலகு ரக
ரயில் வீதிகள்
06 தொடர்பில் அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும்
சாத்தியவள அறிக்கைக்கான
ஆலோசனை சேவை
ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 42)
இலங்கையின்
மேல் மாகாண
வலயத்தினுள் இலகு ரக ரயில் வீதிகள்
06 தொடர்பில் அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும்
சாத்தியவள அறிக்கைக்கான
ஆலோசனை சேவை
ஒப்பந்தத்தினை வழங்குவதற்காக சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டன.
அதன் பிரதிபலனாக
05 சர்வதேச நிறுவனங்கள் தமது விலை மனுக்களை
முன்வைத்துள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள
ஆலோசனை கொள்முதல்
குழுவின் சிபார்சின்
பெயரில் உரிய
ஆலோசனை சேவை
வழங்கும் ஒப்பந்தத்தினை,
202 மில்லியன் ரூபா தொகைக்கு M/s Seoyoung
Engineering Co. Ltd., (SYE), Saman Corporation நிறுவனத்துக்கு
வழங்குவது தொடர்பில்
பாரிய நகரம்
மற்றும் மேல்மாகாண
அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பட்டலி சம்பிக்க
ரணவக்க அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கண்டி நகரத்தின் நகர வாகன
தரிப்பிடத்தினை விருத்தி செய்தல் (விடய இல.
43)
உபாய
முறைகள் நகர
அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி நகரத்தின்
நகர வாகன
தரிப்பிடத்தினை ((Municipal Car Park Roof
Top)) விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல்
கொள்முதல் குழுவின்
சிபார்சின் பெயரில் அவ் ஒப்பந்தத்தினை, 654.11 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு
M/s Sierra Construction (Pvt.) Ltd., நிறுவனத்துக்கு வழங்குவது
தொடர்பில் பாரிய
நகரம் மற்றும்
மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் கௌரவ
பட்டலி சம்பிக்க
ரணவக்க அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. யப்பான் மற்றும் இலங்கை ஆகிய
நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்ப துறையில் பயிற்சியாளர்களை
பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய
இல. 49)
யப்பானின் உயர் தொழில்நுட்ப அறிவினை பரிமாறிக் கொள்வதன் மூலம் பெறப்படுகின்ற நன்மைகளினை கவனத்திற் கொண்டு யப்பானின் நீதி அமைச்சு, வெளிநாட்டு அமைச்சு, சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சு மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்புகள் அமைச்சுக்களுக்கு இடையில் தொழில்நுட்ப துறையில் வதிவிட பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல்
(விடய இல.
50)
புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் மற்றும் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களை முறைப்படுத்தல் என்பவற்றுக்காக நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட நிர்ணயங்கள் தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அந்நிர்ணயங்களின் அடிப்படையில் தற்போதைய அம்பகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை அம்பகமுவ, மஸ்கெலிய மற்றும் நோர்வூட் பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும், தற்போதைய நுவரெலியா பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை நுவரெலியா, அக்கரபத்தன மற்றும் கொட்டகலை பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
மேற் கூறப்பட்ட
உள்ளூராட்சி மன்றங்களும் உட்படுத்தப்பட்டு
அனைத்து உள்ளூராட்சி
மன்றங்கள் ஸ்தாபிப்பதற்கான
நிர்ணயங்களை 2017-11-01ம் திகதி
அரச வர்த்தமானியில்
பிரசுரிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
மன்றங்கள் அமைச்சர்
கௌரவ பைசல்
முஸ்தபா அவர்களினால்
முன்வைக்கப்பட்ட தகவல்களை அமைச்சரவை கவனத்திற் கொண்டது.
0 comments:
Post a Comment