எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனு ;

விசாரிப்பதா இல்லையா? 22ஆம் திகதி முடிவு


உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவை, எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு தீர்மானித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
The Court of Appeal will hear petition filed against Gazette Notification on the Local Government Delimitation Committee Report on November 22

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top