கல்முனையை நான்காக பிரிக்கக் கோரும் கூட்டம்
தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை
மீண்டும் 22 ஆம் திகதி கூடுவதற்கு முடிவு
சாய்ந்தமருதுக்கு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிப்பு
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் அமைச்சர் பைசல் முஸ்தபா தலைமையில் இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இடம் பெற்ற கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள்
எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்மந்தமாக மற்றுமொரு கூட்டத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி
சம்மந்தப்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இன்று சமூகமளிக்காத
முஸ்லிம் கட்சித் தலைவர்களும் சமூகமளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
இன்றைய கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம்
வழங்குவதில் தங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என அமைச்சரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். இப்
பேச்சுவார்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
அமைச்சர் பைசர்
முஸ்தபா,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்
போது கிழக்கு
மாகாண முஸ்லிம்களின்
வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேச
சபைக்கான வேண்டுகோள்
முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும்
பிரதமரும் உடன்பட்டார்கள்.
பின்னர் நான்
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள்
அமைச்சரான போது
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
அப்போது கல்முனை
மக்கள் அதற்கு
எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச
சபையைக் கோருகிறார்கள்
என்று நான்
தமிழ்த் தேசிய
கூட்டமைப்புக்கும் அறிவித்தேன். அதற்கு
அவர்கள் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை.
அதன்
பின்னர் கல்முனை
மக்கள் இங்கு
வந்து கல்முனை
மாநகர சபையை
நான்கு உள்ளூராட்சி
சபைகளாக உருவாக்க
வேண்டும் என்ற
கோரிக்கையும் முன்வைத்தார்கள். இன்று ஜனாதிபதி மற்றும்
பிரதமரின் ஆலோசனைப்
பிரகாரம், தமிழ்தேசியக்
கூட்டமைப்புக்கும் கிழக்கு மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல்
கட்சிகளுக்குமிடையில் ஒரு கலந்துரையாடல்
இடம்பெற்றது. தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட உள்ளூராட்சி
மன்றமொன்றை வழங்குவதற்கு இங்கு உடன்பாடு எட்டப்பட்டது.
அதற்கான எல்லைப்பிரதேசம்
எவ்வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக
ஆராய எதிர்க்கட்சித்
தலைவர் சம்பந்தனின்
தலைமையில் ஒரு
குழு நியமிக்கப்பட்டது.
சகல
கட்சிகளினதும் உடன்பாட்டை பெற்று இதற்கு ஒரு
தீர்வைப் பெற்றுக்கொள்ள
எதிர்பார்க்கின்றோம். இம்மாதம் 22ஆம்
திகதி இதன்
அடுத்த கட்ட
பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு தீர்மானித்தள்ளோம்.
கிழக்கில் தமிழ்
கட்சிகளினதும் ஏனைய கட்சிகளினதும் உடன்பாடு கிடைக்காவிட்டால்
கல்முனை மாநகர
சபையை பிரிப்பதற்கு
உடன்பட மாட்டேன்.
கல்முனையை நான்காக
பிரிப்பதாக இருந்தால் அங்கு தேசிய ஐக்கியம்
நிலைநிறுத்தப்பட வேண்டும். அங்கு மக்கள் மத்தியில்
தேசிய ஒற்றுமை
சிதைவதாக இருந்தால்
அதற்கு நான்
ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை
என்பதை பொறுப்புடன்
தெரிவிக்கின்றேன் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் எதிர்கட்சித்
தலைவருமான ஆர்.
சம்பந்தன், தெரிவித்ததாவது,
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களுடைய
பிரதிநிதிகளுக்கமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். இந்தப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பது அவசியம்.
மக்கள் ஒற்றுமையாக
வாழ வேண்டும்.
அந்த நோக்கத்துடன்
இரண்டு பகுதிகளுக்கும்
ஏற்புடையதொரு தீர்ப்பு ஏற்படுத்துவதற்காக
நாங்கள் தொடர்ந்து
விரைவில் கூடுவோம்.
விளையாட்டுத்துறை
பிரதியமைச்சர் எம்.எச் ஹரீஸ் தெரிவித்ததாவது,
தமிழ்
கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கல்முனையை நான்காக
பிரிப்பதென்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது தொடர்பில்
தொடர்ந்து பேச்சுவார்தை
இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழ் பிரதிநிதிகள்
ஐந்து பேரும்
முஸ்லிம் பிரதிநிதிகள்
ஐந்து பேரும்
எதிர்வரும் வாரங்களில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண
முயற்சி செய்கின்றோம்.
சகல தரப்பினர்களினதும்
அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டு ஒரு இணக்கமான தொரு
கொள்கை ரீதியான
தீர்வாக 4 உள்ளூராட்சி
சபைகளையும் கல்முனையில் உருவாக்குவதென்பது
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறை
சாத்தியமாக்குவதற்குரிய பேச்சுவார்தையை தொடர்ந்து
முன்னெடுப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்ததாவது,
இது
சாய்ந்தமருது மக்களுக்கு நடந்த அநியாயம். ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இவ்விவகாரத்தை
அரசியல்மயப்படுத்தியது. பிரதமரை அங்கு
அழைத்துச்சென்று சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபையை
தருவதாக நம்பிக்கையளித்தார்கள்.
என்னுடைய இயக்கமே
இதனை வழங்கும்
என பின்னர்
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் கூறினார்.
கல்முனையை நான்காக
பிரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கும் ஒரு
சபையை தாருங்கள்
என தமிழ்த்
தேசிய கூட்டமைப்பு
கோரிக்கை விடுத்தது.
அதில்
நாம் உடன்பட்டோம்.
இதற்கு கால
அவகாசம் போடக்கூடாதென
பிரதியமைச்சர் ஹரீஸ் கூறினார். கால அவகாசம்
வழங்க வேண்டும்
என நாம்
கூறினோம். இங்கு
யாருக்கும் பாதகமில்லாமல் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு
தீர்வு காணப்பட
வேண்டும் என்ற
நோக்கிலேயே அனைவரும் உள்ளார்கள். இதனை அரசியல்மயப்படுத்தாமல்
இருந்திருந்தால் இவ்வளவு தூரம் இப்பிரச்சினை சென்றிருக்காது.
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
அப்பகுதி மக்களுக்குள்
பிரச்சினையை ஏற்படுத்தி வைத்துள்ளது.
தமிழ்
தேசிய கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்ததாவது,
சாய்ந்தமருது
பிரதேச சபை
உருவாக்கத்திற்கு எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்ப்பில்லை. அதேநேரம்
ஏனைய பிரதேச
சபைகள் அல்லாத
நகர சபைகள்
உருவாக்க வேண்டும்
என்றால் தமிழர்களின்
பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபையை
உருவாக்க வேண்டும்.
அதில் தமிழ்
பிரதேசங்களையும் தமிழ் இடங்களையும் உள்ளடக்கியதான ஒரு
பிரதேச சபையை
உருவாக்கவே நாம் முன்மொழிந்துள்ளோம். இதை தவிர
ஒரு சபை
அல்ல. எத்தனை
சபை உருவாக்கினாலும்
எமக்கு பிரச்சினையல்ல.
நாம்
ஒரு சபையையே
வேண்டுகின்றோம். ஒரு நகர சபை. தமிழ்
பிரதேசங்களை உள்ளிடக்கியதான ஒரு நகர சபை
உருவாக்கப்பபடும் போதே தமிழர்களின் கலையும் கலாசாரமும்
அதில் பாதுகாக்கப்படும்.
எமது உரிமைகளையும்
அபிவிருத்தியையும் அதில் செய்ய
முடியும். நாங்கள்
எங்களுக்கொரு சபையை கேட்கவில்லை. ஆனால் நான்கு
சபையாக முன்வைக்கப்படும்போதே
நாம் எங்களுக்கொரு
சபையை வேண்டுகின்றோம்.
எமது முன்மொழிவை
ஏற்றுக்கொண்டார்கள். சாய்ந்தமருதை கொடுப்பதில்
எமக்கு நூறு
வீத உடன்பாடு
உள்ளது. சாய்ந்தமருதில்
70 வீதம் முஸ்லிம்,
30 வீதம் தமிழர்கள்
உள்ளார்கள். சாய்ந்தமருது பிரதேச சபை வழங்குவதால்
60 வீதம் முஸ்லிம்
40 வீதம் தமிழர்களாக
மாறிவிடுவார்கள் என்கின்ற காரணத்திற்கமையவே இதனை ஒரு
அரசியல் நோக்கத்திற்கு
பிரிக்கக் கூடாதென
சொல்கிறார்கள்.
முன்னாள்
அமைச்சர் அதாவுல்லா
கல்முனையை
நான்கு பிரிவுகளாக
பிரிப்பதற்கு நாம் உடன்பட்டோம். இப்பொழுது மிக
குறுகிய காலத்திற்குள்
நான்கை எவ்வாறு
பிரிக்க வேண்டும்
என்பதை ஆராய்வார்கள்.
நான் அமைச்சராக
இருந்த போது
நான் பிரித்த
அந்தக் குறிப்புக்களை
பரிசீலிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. நான்
இருந்த பொது
அதனை வழங்குவதற்கான
வர்த்தமானியை அனுப்பியிருந்த விடயத்தை இன்று அமைச்சரிடம்
தெளிவாக பகிரங்கமாக
கூறியுள்ளேன் என்றார்.
இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, தேசிய ஐக்கிய முன்னணியின்
தலைவர் அசாத் சாலி, உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர்களான
மாவைசேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஆர். கோடிஸ்வரன், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கல்ந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment