கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு
குறைந்தபட்ச சம்பளம்
மாதம் ரூ.31700/=அரசு நிர்ணயம்
அரபு
நாடுகளில் ஒன்றான
கத்தாரில் வெளிநாடுகளில்
இருந்து வந்து
தங்கி ஏராளமான
தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு
போதிய சம்பளம்
வழங்கவில்லை என புகார்கள் வந்தன.
இதை
தொடர்ந்து அவர்களுக்கு
குறைந்தபட்ச சம்பளத்தை கத்தார் நாட்டு அரசு
அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாதம் 750 ரியால் அதாவது இலங்கை ரூபா மதிப்பில் சுமார் ரூ.31 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என
தொழில்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம்
அங்கு பணி
புரியும் 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
இத்தகவலை தொழிலாளர்
நலத்துறை மந்திரி
அல்-நுயிஸ்மி
தெரிவித்துள்ளார்.
மேலும்,
தொழிலாளர்களுக்கு மாதம் 750 ரியால் சம்பளம் வழங்கவேண்டும்
என்ற நிபந்தனையின்
பேரில் தான்
அனைத்து காண்டிராக்ட்
தொழில்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment