கலவரம் ஏற்பட்ட கிந்தோட்டை பிரதேசத்திற்கு
விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இனக்கலவரத்தால்
பாதிக்கப்பட்ட காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
விஜயம் செய்துள்ளார்.
கடந்த
வௌ்ளிக்கிழமை மாலை கிந்தோட்டைப் பிரதேசத்தில் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரம் காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு
பாரிய சேதம்
ஏற்பட்டது.
அத்துடன்
இரண்டு பள்ளிவாசல்கள்
மீதும் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டதுடன், பெட்ரோல் குண்டு
வீச்சுகளும் இதன்போது பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த
நிலையில் இன்று
காலை பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு
நேரில் சென்று
மக்களை சந்தித்து
கலந்துரையாடியுள்ளார்.
பிரமருடன் அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் தயசுந்தர, காலி மாவட்ட செயலாளர் எஸ் டி கொடிக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment