நீரில் அடித்து செல்லப்பட்ட மேலுமொரு
சிறுமியின் சடலம் மீட்பு
- ஒருவரை தேடும் பணி தீவிரம்
மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன 8 பேரில் இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய இரு சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்னுமொரு சிறுமியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
தற்பொழுது எஞ்சியுள்ள ஒரு சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள்
கிங்சிலி ரத்நாயக்க (வயது – 40)
சந்திராகாந்தி (வயது -
59)
வினுக்கி ரத்நாயக்க (வயது – 13)
ஹிருனி ரத்நாயக்க (வயது - 4)
ரவிந்திர லசந்த
(வயது – 39)
ருவனி டில்ருக்ஷி (வயது – 38)
ரிஷாதி வீகிஷா (வயது - 12)
சந்துனி (வயது –
12)
முதல் இணைப்பு
நீரில் அடித்துச் செல்லப்பட்ட அறுவரின் சடலங்கள் மீட்பு!
இருவரின் சடலங்களை தேடும் பணி தொடர்கிறது
மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போன எண்மரில் அறுவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகின்றது. மேலும்இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் தொடர்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நேற்று பகல் குளித்துக்கொண்டிருந்த போது, 8 பேர் நீரில்அடிச்செல்லப்பட்டனர்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா மேற்கொண்டு, கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழைமை மாத்தளைக்கு வருகைதந்துள்ளனர். இவர்களில் எண்மரே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரு சிறுமிகளின்சடலங்கள் இன்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் மேற்படி இரு சிறுமிகளின்சடலங்களையும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்எனினும் மழை காரணமாக, மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மீட்புப் பணியில், விசேட அதிரடிப்படை, கடற்படையின் சுழியோடி பிரிவினர், பொலிஸார் மற்றும்பொதுமக்கள் ஈடுபட்டு வருகினறனர்.
0 comments:
Post a Comment