வெளியில் இருந்து
வந்தவர்களே
காலி – கிந்தொட்டயில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
காலி
– கிந்தொட்டயில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின்
போது, பல
வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து
நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து
வந்த சிங்களக்
காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி
மக்கள் தெரிவித்துள்ளனர்.
“வெள்ளிக்கிழமை
இரவு வந்த
வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான
தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான்
தெரிவித்துள்ளார்.
கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என தமக்கு தோன்றுவதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த
வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும்
மேற்பட்ட வீடுகளும்
வர்த்தக நிலையங்களும்
தாக்கப்பட்டுள்ளன.
அந்த
பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே
இந்த வன்முறைகளை
மேற்கொண்ட குழுவினர்
தங்கியிருந்தனர்.
பௌத்த
பிக்கு ஒருவரின்
பின்புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக
அந்த பகுதியிலுள்ள
முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே,
இதற்கு முன்னர்
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபமிட்டார் என்று
குற்றம்சாட்டப்பட்ட பொது பலசேனாவின்
பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த
வன்முறைகள், மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில்
நேற்று ஈடுபட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment