எல்லை பிரச்சினையே இல்லாத தேசியப் பட்டியலுக்கு
சாய்ந்தமருது மக்களை போன்று
அட்டாளைச்சேனை மக்களால் துணிந்து கேட்க முடியுமா?
சாய்ந்தமருது
மக்கள் தங்களுக்கு
பிரதேச சபை
வேண்டும் என்பதற்காக
வீதியில் இறங்கி
மிகக் கடுமையான
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாய்ந்தமருது மக்களுக்கு
இன்று இல்லாவிட்டால்
நாளை பிரதேச
சபை கிடைக்கலாம்.
ஆனால், அட்டாளைச்சேனையின்
நிலை அவ்வாறில்லை.
அவர்களுக்கு
சொந்தமான தேசியப்பட்டியல்
சல்மானுக்கு வழங்கப்பட்டு கரைந்து கொண்டிருக்கின்றது. அரை ஆட்சிக் காலத்தை கடந்தும்
விட்டது. இருந்தாலும்
அமைச்சர் ஹக்கீம்
கொடுப்பதாக இல்லை. அட்டாளைச்சேனை மக்களும் கேட்பதாக்கவுமில்லை.
அட்டாளைச்சேனை
மக்களின் வாக்குகளால்
வெற்றி பெற்ற
சம்மாந்துறையை சேர்ந்த மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக
உள்ளார். அவருக்கு
அவரது சொந்த
ஊரான
சம்மாந்துறையில் கூட பெரிதான
வாக்குகள் கிடைக்கவில்லை.
தேசியப்பட்டியலை காட்டியே அவருக்கு வாக்களிக்குமாறு அமைச்சர்
ஹக்கீம் கூறியிருந்தார்.
அல்லது அந்த
மக்கள் வேறு
தீர்வை நோக்கி
நகர்ந்திருப்பார்கள்.
சாய்ந்தமருது
மக்களைப் போன்று
துணிந்து போராடும்
திராணி அட்டாளைச்சேனை
மக்களுக்கு இல்லையா? நீங்கள் துணியும் வரை
அவர் உங்களை
ஏமாளியாகவே பார்ப்பார். தற்போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில்
என்ன தடை
உண்டும். இதிலும்
சாய்ந்தமருதில் உள்ளதை போன்று எல்லை பிரச்சினை
உள்ளதா?
ஹசனலிக்கு
தேசியப்பட்டியல் செல்லப் போகிறது என்றவுடன் பள்ளியில்
அனைவரும் ஒன்றிணைந்து
முடிவெடுத்து செயற்பட முடியுமாக இருந்தால், ஏன்
தங்களது தேசியப்பட்டியலை
கோரி அட்டாளைச்சேனை
பள்ளிவாயலால் முடிவெடுக்க முடியாது. ஹசனலியின் பாவம்
அட்டாளைச்சேனை மக்களை சும்மா விடாது.
(ஹபீல் எம்.சுஹைர்)
0 comments:
Post a Comment