நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி
- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
நாடு
முழுவுதும் அமைந்துள்ள 4 ஆயிரம் கூட்டுறவு விற்பனை
நிலையங்கள் கோப் சிற்றி, மினி கோப்
சிற்றி என்பனவற்றின்
ஊடாக சலுகைவிலையில்
அரிசி உள்ளிட்ட
அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சர் ரிஷாத்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
நேற்று இடம்பெற்ற
ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்கள்
கூடுதலாக நடமாடும்
ரெயில் நிலையம்,
பஸ் தரிப்பு
நிலையம், வாராந்த
சந்தை என்பனவற்றில்
நடமாடும் வாகனங்களை
பயன்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அதிகரித்து
வரும் பொருட்களின்
விலையை கட்டுப்படுத்துவதற்காக
கூட்டுறவு மொத்த
விற்பனை கூட்டுத்தாபனத்தின்
ஊடாக அத்தியாவசிய
பொருட்களை இறக்குமதி
செய்வது தொடர்பில்
அரசாங்கம் கவனம்
செலுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment