சாய்ந்தமருதில் உருவ பொம்மை எரிப்பு விவகாரம்

வாக்குறுதி கொடுத்தவர்களும் உதவி செய்ய வந்தவரும்

இரண்டும் ஒன்றல்ல



சாய்ந்தமருக்கு தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் முஸ்லிம் .காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் .காங்கிரஸ் உப தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களுடைய உருவ பொம்மைகளுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினையும் எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை என நியாயவாதிகள் கருத்துக்களை வெளியிட்டு கவலை தெரிவித்து வருகின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது, முஸ்லிம்.காங்கிரஸின் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும்.
இவ்வாறு சாய்ந்தமருது மக்களுக்கு கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பொம்மையுடன் சேர்ந்து, சாய்ந்தமருது மக்களின் எதுவித ஆணையினையும் பெற்றுக் கொள்ளாத, சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து ஒரு உள்ளுராட்சி சபை உறுப்பினரைக் கூட பெற்றுக் கொடுக்காத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினையும் எரித்தமையானது தவறானது என சாய்ந்தமருதில் நியாயத்தைப் பேசும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்து அமைச்சராகவும் பிரதி அமைச்சர்களாகவும் (நிந்தவூர், சம்மாந்துறை) பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் நாட்டின் பிரதமராலேயே வாக்குறுதி அளிக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கான பிரதே சபை வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் கால தாமதப்படுதப்படுவதை அறிந்து மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனைத்துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவியாக நின்ற ஒருவருக்கு அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் சுமத்துவது நியாயமாகுமா என்று நியாயத்தை உணர்ந்து கொண்ட மக்களே இவ்வாறு கவலை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு பிள்ளைக்கு தந்தை எந்த வசதிகளையும் செய்து கொடுக்கின்றான் இல்லை என்பதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், ‘அந்த வசதிகளை நான் செய்து தருகிறேன்என்று சொல்கிறார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரரையும் உதவி செய்யாமல், அந்தத் தந்தை தடுத்து விடுகின்றான். இந்த நிலையில், தந்தைக்கு பாடம் கற்பிக்க நினைக்கும்                   பிள்ளை, பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க நிலைப்பது எந்த வகையில்  புத்திசாலித்தனமாகும் அதனைத்தான் சாய்ந்தமருதில் உள்ள வீறு கொண்ட இளைஞர்கள் செய்து விட்டார்கள்..
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து அவர் வாயாலேயே, சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவேன் என, றிசாட் பதியுத்தீன் வாக்குறுதி வழங்க வைத்தார் என்பது உண்மை.
ஆனால், அதன் பிறகு என்ன நடைபெற்றது என்பது சாய்ந்தமருது மக்களுக்கு தெரியுமா? என்றும் விடயம் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சியின் தலைவர் அரசாங்க மேலிடத்தில் திகாமடுல்ல மாவட்ட மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று எங்கள் கட்சியே 3 ஆசனங்களுடன் இருக்கின்றது.
ரிஷாத் கட்சியினருக்கு அம்பாறை மாவட்டத்தில் எந்த ஆசனமும் இல்லை அவர்களால்  சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை குறித்து முடிவு எடுக்க முடியாது. அவரை இந்த விடயத்தில் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று கூறப்பட்டு அமைச்சர் ரிஷாத்தினதும் பைஸர் முஸ்தபாவினதும் இது குறித்த நடவடிக்கைகளை நிறுத்தியது சாய்ந்தமருதில் எத்தனை பேருக்கு தெரியும்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது

 சாய்ந்தமருதுக்கு வந்த ரவூப் ஹக்கீம் இதன் பின்னர் ஆவேசமாக என்ன பேசினார்;

சாய்ந்மருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றவர்கள் நாங்கள்தான். அவர்களுக்கு நாங்கள்தான் உள்ளுராட்சி சபையினைப் பெற்றுக் கொடுப்போம். அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய நினைத்தால், அதுமுஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடத்திடம் பலிக்காது. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவோம் என்பது, மு.கா. தலைமை கொடுத்துள்ள வாக்குறுதியாகும். அதை நிறைவேற்றியே ஆகுவோம்

 என்று சூழுரைத்து விட்டுப்போனதை சாய்ந்தமருதில் வீறு கொண்டு உருவ பொம்மை எரித்த இளைஞர்களால் மறுக்க முடியுமா?  

அதாவது, “எங்களுக்கு அதிகபட்ச வாக்குகளை வழங்கிய மக்களுக்கு நாங்கள்தான் உள்ளுராட்சி சபையினை வழங்குவோம். அதை நீங்கள் செய்ய முடியாதுஎன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமும் சாய்ந்தமருதில் வைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்றிருந்தார் ரவூப் ஹக்கீம்.

அப்படியானால்நீதி, நியாயம் மற்றும் தர்மங்களின் படி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு வாக்குறுதி வழங்கிய ஹக்கீமுடையதுதானே? சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவரும் நூற்றுக்கு நூறு வீதம் அமைச்சர் ஹக்கீம்தானே?

சாய்ந்தமருதில் வீறு கொண்ட இளைஞர்களே! சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழியை.  நிறைவேற்ற தவறியவர் யார்? 

வாக்குறுதி தந்தவரும் அவரோடு பள்ளிவாயலில் வைத்து வாக்குறுதி வழங்கியவரும்  சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்று (நிந்தவூர், சம்மந்துறை) பிரதி அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?..

உணர்ச்சிகளால் வீறு கொண்டு அறிவு மழுங்கிய நிலையில், உதவிக்கு வந்த ஒரு மனிதனையும் சேர்த்துத் தண்டித்து விட்டது சரியானதுதானா?

சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்றவர்கள்வாக்குகளை மீறி துரோகம் செய்திருப்பது போன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த மக்களை ஏமாற்றி துரோகம் செய்யவில்லையே.

இப்படியான நிலையில் அப்பாவியான அமைச்சர் ரிஷாத்துக்கு ஏன் உருவ பொம்மை கட்ட வேண்டும்?

இந்த உருவ பொம்மை எரிப்பு விடயத்தில் சாய்ந்தமருது பள்ளிவாயல் அமைப்புக்களோ, உலமாக்களோ எதுவித சம்மந்தமில்லை என்று உறுதியாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன். அவருக்கு சாய்ந்தமருதில்  உருவ பொம்மை எனபது வேதனையான விடயம் என நடுநிலை மக்களும் கூறியிருக்கிறார்கள்

அதேநேரம் சாய்ந்தமருதிலுள்ள மக்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு உருவ பொம்மை கட்டியது தவறானது அவரிடம் மன்னிப்புக் கோர வேண்டிய விடயம் என்றும் கூறுகின்றார்கள். 
அமைச்சரிடம் இதற்காக விடயங்களை நன்றாக விளங்கிய மக்கள்  மன்னிப்புக் கோருகின்றார்கள். 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top