எங்கள் தோட்ட பாதையை

நாங்களே செய்து கொள்கின்றோம்

பொங்கி எழுந்த பெரட்டாசி தோட்ட மக்கள்

அன்மையில் புஸ்ஸல்லாவையில் பெரட்டாசி தோட்ட மக்கள் தங்களது தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை 25 வருடங்களாக திருத்தபடாததாலும் முன்ணைய அரசாங்கத்தினால் பாதை திருத்தம் ஆரபிக்கபட்டு 04 கி. மீ மாத்திரம் திருத்தபட்டு இடையில் நிருத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்க் கொண்டு கண்டி நுவரெலியா பிரதான பாதையை சுமார் 6 மணி நேரம் மறித்து வைத்திருந்தனர். அதற்கு உரிய தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இந்த பாதையின் இரு புரங்களிலிலும் உள்ள பெரட்டாசி ரஸ்புருக் பிரிவுஇ பெரட்டாசி பிரிவுஇ பூச்சிகொட பிரிவுஇ  பெரட்டாசி தொழிற்சலை பிரிவுஇ  மேரியல் பிரிவுஇ அயரி பிரிவுஇ  எல்பொட வடக்குஇ மேமொழி பிரிவுஇ  காச்சாமலை பிரிவுஇ கட்டுகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் பிரிவுஇ கந்தலா தோட்ட மக்கள் சுமார் அனைவரும் பாரிய சிரமதான பனியில் ஈடுபட்டனர். இதில் பாடசாலை மாணவரகள்ää முதியோர் உட்பட சிறுவர்களும் இணைந்துக் கொண்;டார்கள் (19.11.2017) இந்த சிரமதான பணிக்கு தோட்ட நிர்வாகங்களும் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியது. புஸ்ஸல்லாவ நகர வர்த்தகர்களின் அனுசரனையும் கிடைத்தது. புஸ்ஸல்லாவ பொலிஸாரும் இணைந்துக் கொண்டனர். இந்த செயற்திட்டம் ஒரு தற்காலிக செயற்திட்டமாகவே கருத முடியும். நீண்ட காலநோக்கில் இந்த பாதையை உடடியாக திருத்தி கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

பாரிய போராட்டத்திற்கு பின்னர் இந்த பாதையை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன அவற்றில் கொத்மலை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் உடனடியாக இந்த பாதையை திருத்துவதற்கான தீர்மாணம் எடுக்கபட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் சுமார் 02 நிமிடம் இந்த பாதை அவலம் தொடர்பிலும் கட்டாயம் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி பாராளுமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்  அவர்கள் இந்த பாதை மேற்படி தோட்டங்களுக்கு சொந்தமானதாகையால் அரசாங்கத்திற்கு பணம் ஒதுக்க முடியதாத நிலையில் உள்ளது. அதனால் இந்த பாதையை மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்க் கொள்ளபட்டுள்ளதாகவும் அவை கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக மகாண செயலாளர் கூறியுள்ளதாகவும் அவை நிரைவேறும் பட்சத்தில் கூடிய விரைவில் இந்த பாதையை திருத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பதாக கூறினார். இவர்களை போல் மலையத்தின் ஏனைய தலைவர்களும் இந்த பாதையை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பாதையை திருத்தி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதில் அக்கரையும் இருக்கின்றது. எது எப்படியோ இந்த பாதையை உடனடியாக திருத்தி அமைக்க வேண்டும்
               
இந்த பாதை அவலம் காரணமாக மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம் காரணம் 25 கி.மீ பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்பெற்றுறுள்ளது. 12 பேர் இறந்துள்ளனர்; பலர்  பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும்இ குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால்இடையில் இறந்துள்ளனர். காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது 9 பிரிவினை கொண்ட தோட்டத்தில் யுஆடீருடுயுNஊநு இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லைஅவசர தேவை ஏற்படும் போது தோட்ட லொறிகள் மூலமாக புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் இறந்தும் உள்ளனர்.

இப்பிரதேசத்தில் காணப்படும்  ஸ்டெலன்பேர்க் .விää ஹெல்பொட நோத் .விää அயரி .விää பெரட்டாசி. .வி. மேமொழி .வி. ரஸ்புரூக் .வி போள்ற பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இப்பிரதேசத்திற்கு செல்லும் பஸ் புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து காலை 8.00 மணிக்கே புறப்படும் பாடசாலை செல்லும் போது சில பாடசாலைகளுக்கு 9.00 மணியும் சில பாடசாலைகளுக்கு 10.00 மணியுமாகின்றது. மாலையில் பாடசாலை விடுவதற்கு முன்னர் 1.00 மணிக்கு ஆசிரியர்கள் மீண்டும் வீடு திருப்பும் நிலையும் ஏற்பட்டள்ளது. இதனால் இப்பிரதேச மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்;. கல்வி நிலையும் வீழ்ச்சி அடைற்து வருகின்றது.

அத்துடன் இப்பிரதேசங்களில் சேவை செய்யும் ஏனைய அரச உத்தியோகஸ்தர்களும்ää பெருந்தோட்டங்களிலும் சேவை செய்யும் உத்தியோகஸ்த்தர்களும் பாதிப்டைந்து  உள்ளனர். ஆரம்ப காலம் தொட்;டு இந்த பாதையில் சேவையில் இருந்த அரச போக்குவரத்து சேவை 10 வருடங்களாக பாதை அவலம் காரணமாக இடை நிருத்தபட்டுள்ளது. தற்போது தனியார் பஸ் சேவையே நடைபெற்று வருகின்றது.

இதிலும் இரு மடங்கு பெரும் தொகையான பணத்தை செலுத்தியே பயணிக்க வேண்டி உள்ளது. இந்த வாகனங்களும் அடிக்கடி உடைந்து பாதிப்புக்கு உள்ளவதால் தனியார் பஸ் உரிமையாளர்களும் பாதிக்பட்டு உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு சீசன் டிக்கட்டும் இல்லை அரச போக்குவரத்து சேவையும் இல்லை.

இப்பிரதேசத்தில் இந்த மக்களின் மேலதிக வருமானத்திற்காக மரக்கரி தோட்டங்கள் செய்து வருகின்றனர். இவர்களின்  இந்த உற்பத்தியை கூட சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும். தேவையான பொருட்களை தோட்டங்களுக்கு கொண்டு வர முடியாத நிலையும் தோள்றி உள்ளது.   இவ் நவீன காலத்தில் பாதை அவலம் காரணடாக  இப்படியும்நடக்கின்றது என்றால்;. அது மிகவும்  ஆச்சரிய படுத்துவதாக்கும் வேதனைபடுவதற்குரியதாகும். தோட்டத்தொழிலாளர்களின்  நாளாந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வகையான நிலைமை  வேதனைக்குறிய விடயமாகும். ஒரு பாதை அவலத்தின் பின்னால் இவ்வாறான இவ்வளவு பிரச்சனைகள் காணப்படுவது வேதனைக்குறிய விடயமாகும்.

பா.திருஞானம்












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top