கிந்தோட்டையில் வழமை நிலமை திரும்பும் வரையில்
பாதுகாப்பு படையினர் விலக்கி கொள்ளப்படமாட்டார்கள்
சிறிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காலி கிந்தோட்டை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பநிலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீண்டும் வழமை நிலையயை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இப்பிரதேசத்தில் வழமை நிலை ஏற்படும் வரையில் பாதுகாப்பு படையினர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்ததுள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் நேற்று இரவு 8 மணிக்கு இடம் பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் தயசுந்தர, காலி மாவட்ட செயலாளர் எஸ் டி கொடிக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை பிரதேசத்தில் இனவாதத்தைத்தூண்டும் வகையில் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த உடைமைகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உறுதிபடுத்துவதற்காக சமாதானக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த வீடுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று கிந்தோட்டை உட்பட பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
அமைச்சர்களான
றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா பிரதி அமைச்சர்களான
எம்.எஸ்.எஸ். அமீரலி, எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான்,
மரிக்கார், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
0 comments:
Post a Comment