ஸ்ரீமத் ஹென்ரி ஓல்கட் முன்மாதிரி ஆரம்பப் பாடசாலை
மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
கடந்த
ஐந்தாம் ஆண்டு
புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற குருநாகல் அம்பன்பொல ஸ்ரீமத் ஹென்ரி
ஓல்கட் முன்மாதிரி
ஆரம்பப் பாடசாலை
மாணவர்கள் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவை
சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல்
இந்த சந்திப்பு
இடம்பெற்றது.
கடந்த
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய இப்பாடசாலையின் 47 மாணவர்களில் 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய 47 மாணவர்களும் 132 புள்ளிகளுக்கும்
அதிகமான புள்ளிகளைப்
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களின்
திறமையைப் பாராட்டிய
ஜனாதிபதி, அவர்களுக்கு
பரிசில்களை வழங்கினார்.
1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை
2000 ஆம் ஆண்டு
மூடப்பட்டது. 2005 ஆம் ஆண்டு
மீண்டும் 17 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட
இப்பாடசாலையில் தற்போது 245 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
பாடசாலை
மற்றும் கல்வி
வலயத்திலுள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக மாணவர்களும்
பெற்றோர்களும் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்தனர்.
பாடசாலையின்
குறைபாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான
உத்தேச விபரங்களை
உடனடியாகத் தமக்குக் கிடைக்கச் செய்யுமாறு குறிப்பிட்ட
ஜனாதிபதி, மேற்படி
வலயத்திலுள்ள பாடசாலைகளின் குறைபாடுகளை துரிதமாகத் தீர்ப்பதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு
மாகாண முதலமைச்சருக்கு
ஆலோசனை வழங்கினார்.
மிகவும்
பின்தங்கிய பிரதேசத்தில் குறைந்த வசதிகளுடன் மேற்படி
மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள
பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி,
தூரப்பிரதேச மாணவர்கள் கல்வித்துறையில் காட்டிவரும் திறமைகளை
பாராட்டினார்.
இந்த
நிகழ்வில் இராஜாங்க
அமைச்சர் ரி.பீ.ஏக்கநாயக்க,
வடமேல் மாகாண
முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, அதிபர் தம்மிக்க
சமன் ஹேரத்
மற்றும் வலய
கல்விப் பணிப்பாளர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment