எரிபொருட்களுக்கான விலையை
உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தி,
ஹம்பாந்தோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களுக்கான விலையை உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தி, ஹம்பாந்தோட்டை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை -
தங்காலை பிரதான வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த வீதியூடான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment