பாராளுமன்ற புதிய அமர்வில்
ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை தொடர்....2
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றினார்.
பாராளுமன்ற புதிய அமர்வில் ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை பின்வருமாறு:
லக் சதொச விற்பனை மையங்கள் 300 இலிருந்து 400 வரை உயர்த்தப்பட்டிருப்பதுடன் அவற்றினூடாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறன. நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நுகர்வோர் சங்கங்கள் புதிய தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார துறைக்குள் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க செயலை நாம் புரிந்துள்ளோம். பல்வேறு தடைகளை சந்தித்தவாறு 50
ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த புதிய ஔடதக் கொள்கையை நாம் நிறைவேற்றினோம்.
அதனூடாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு புற்று நோயாளியின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் மொத்த மருத்துவ செலவையும் அரசு ஏற்கும் கொள்கையை முன்வைத்துள்ளது.
இருதய நோயாளிகளின் சத்திர சிகிச்சை செலவுகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்ளும் புதிய திட்டம் முதன்முறையாக எம்மால் நிறைவேற்றப்பட்டதுடன் இருதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் பொருத்துவதனை இலவசமாக வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எமது வைத்திய மற்றும் தாதிச்சேவையை முதன்மையாகக் கொண்ட சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பாராட்டை நாம் பெற்றுள்ளோம்.
எமது அரசாங்கம் நிறைவேற்றிய தேசிய மது கொள்கை தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியும்.
இனங்காணப்படாத சிறுநீரக நோய்கள் தொடர்பாக முக்கிய அவதானத்தை செலுத்துவதுடன்,
நிவாரணம் தடுப்பு மற்றும் மருத்துவ துறைகள் விரிந்த தேசிய திட்டமாக செயற்படுத்தினோம்.
3,600 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக நோயை இனங்காணுவதற்கான நீர் பரிசோதனை மையங்களை உருவாக்கியதுடன், அத்திட்டம் தற்போது பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் இயங்கிவருகிறது.
தொழில் மற்றும் தொழில்நுட்ப துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அனைத்து பாடநெறிகளையும் இலவசமாக கற்பதற்கு 2017 முதல் நாம் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.
தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதனூடாக புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் பணிக்கான மனிதவள மேம்படுத்தலுக்கான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்.
வறுமையை இல்லாதொழிப்பதற்காக சமுர்த்தி பெறுபவர்களின் கொடுப்பனவுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராம சக்தி மக்கள் செயற்திட்டதினூடாக இவ்வருடம் மட்டும் 2000 கிராமங்களை முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதியோர் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு பொதிக்கான கொடுப்பனவு ரூபா 500 இலிருந்து 2,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்க உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் துறையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் விசேட அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹபொல புலமைப்பரிசில் தொகை 2500 ரூபாவிலிருந்து 5000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட
3000 ரூபா 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகக்குறுகிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டதுடன் உலகிலுள்ள மிகப்பெரிய விமானங்களை தரையிறக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை இலங்கைக்கான அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் மூன்றாவது துறையாக விளங்குகிறது. ஒட்டுமொத்த அந்நிய செலாவணி வருமானத்தின் 15 சதவீதம் சுற்றுலாத்துறை மூலமாக இன்று கிடைக்கப்பெறுகிறது.
இராணுவத்தினருக்கான ‘’சத்விரு, சங்ஹிந்த’’ இராணுவ வீடமைப்புத் திட்டம் 2017இல் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இன்று அதில் 90 சதவீத பௌதீக வளர்ச்சியை காணமுடிகிறது.
உபாயமார்க்க தேசிய பாதுகாப்பு தொடர்பாடல் திட்டம் 2015 இல் ஆரம்பித்ததுடன் அதன் வளர்ச்சி தொடர்பாக மகிழ்ச்சியடைய முடிகிறது.
அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கான விசேட சம்பளம் மற்றும் கொடுப்பனவு எம்மால் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் விதவைகளுக்கான “ரணவிரு பாதுகாப்பு” கொடுப்பனவின் கீழ் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களின் மனைவியருக்கும், காலமான இராணுவத்தினரின் மனைவியருக்கும் அவர்களின் வாழ்நாள் வரை கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம், ஓய்வூதிய திணைக்களத்தினால் நிறைவேற்றப்படுகிறது.
ஓய்வூதிய நிலுவைகளை முறையாக செலுத்தும் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்
40,475 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் முப்படையினரின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு கிடைக்காமல் இருந்த யுத்தத்தின்போது இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பயன்படுத்திய காணிகளில் 85 சதவீத காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறையின் கீழ் 10,000 காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. .
பல தடைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு, பாரிய தடைகளுடன் மிக மெதுவாகவே செயற்படுத்தப்பட்ட மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய முன்னேற்றத்தை எம்மால் அடைய முடிந்துள்ளது.
2015 முதல் புதிய துரிதப்படுத்தும் கட்டிட கட்டுமானத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் தகுந்த செயற்குழுவை நியமிப்பதனூடாக பராக்கிரம சமுத்திரம் போல் 6 மடங்கு பெரியதான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு நீர் விநியோகம் செய்வதுடன் களுகங்கை செயற்திட்டத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேசிய விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன், வட மத்திய மாகாணத்தின் கால்வாய்களை மே்மபடுத்தியதுடன் 800 சிறிய குளங்களையும் வடமாகாணத்தில்
1400 சிறிய குளங்களையும் ஊவா மாகாணத்தில் 350 சிறிய குளங்களையும் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2500 க்கும் மேற்பட்ட சிறிய குளங்களை ஒரே நேரத்தில் புனரமைக்கும் மிகப்பெரிய திட்டமானது சுதந்திரத்திற்கு பின் ஒரு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாரிய நீர்ப்பாசன திட்டமாகும்.
வடமேல் மற்றும் உலர்வலய பகுதிகளில் நீர்சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவை வழங்குவதற்காக வடமேல் பெரிய கால்வாய், வடமத்திய பெரிய கால்வாய், மினிப்பே பெரிய கால்வாய் என்று இலங்கை மக்களின் எதிர்கால பயன்பாட்டுக்காக பிரமாண்ட நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் பாதுகாப்பின் கீழ் பொலித்தீன், பிளாஸ்டிக் தொடர்பில் கடும் சட்டங்களை நிறைவேற்றியதுடன், ஐக்கிய நாடுகள் ‘’தூய்மையான சமுத்திரம்’’ திட்டத்தின் கீழ் தெற்காசிய பிராந்தியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் மத்தியில் கண்டல் தாவர பாதுகாப்பிற்கான முதன்மை நாடாக எமது நாடு விளங்குகிறது.
சுற்று சூழல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம், பிள்ளைகளைப் பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம், பேண்தகு பாடசாலை திட்டம் ஆகியவை 90 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. சுற்றாடல் மாசு கட்டுப்பாடு, கழிவு முகாமைத்துவம், வன பாதுகாப்பு, பேண்தகு காணி முகாமைத்துவம், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஆகிய மேம்படுத்தும் விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த கழிவு முகாமைத்துவத்திற்கு நிரந்தர செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
நான் இதுவரை குறிப்பிட்டது உங்களின் தலைமைக்கு கீழ் 08 ஆவது பாராளுமன்ற, முதலாவது சபை அமர்வில் தற்போதைய அரசினால் பெற்றுக்கொண்டுள்ள நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்திக்கும் குடிமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான மற்றும் வளர்ச்சி ரீதியான வெற்றிகளாகும்.
இந்த வெற்றிகள் மூலமாக இந்த நாடு ஜனநாயக மற்றும் மனித நேய நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரச முறையொன்று மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேவையான நிரந்த அடித்தளமொன்றை உருவாக்கியுள்ளோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆனால் நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் விலகிச் சென்றதாக கருத முடியாது.
அரசின் புதிய பயணப்பாதைக்கு தேவைப்படும் விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தி நாடு முகங்கொடுத்திருக்கும் 10 இலட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான கடனை மக்களின் மீது சுமத்தாமல் முகாமைத்துவம் செய்வது கட்டாயமாகவுள்ளது. வறுமையில் வாடும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது, அரச சேவையை முறைமைப்படுத்துவது மற்றும் வினைத்திறனானதாகவும் மாற்றுவதுடன், நெகிழ்வுத் தன்மையுடன் மக்களுக்கு சேவையை வழங்குவதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்கு தேவைப்படும் கொள்கைகளை உருவாக்குவது, செயல் உபாயங்களை கண்டறிந்து முகாமைத்துவ முடிவுகளை எடுப்பதும் இங்கு முதன்மையாகும்.
படித்த இளம் சமூகத்தினர் மற்றும் மக்கள் விரும்பும் துரித வளர்ச்சிக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதோடு அதை எதிர்காலத்திற்காக தள்ளிவைக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கிய இனத்தவர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு தங்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் உறுதிசெய்ய வேண்டும். அது இலங்கையர் என்ற முறையிலேயாகும்.
துரித பொருளாதார வளர்ச்சிக்காக அரச மற்றும் தனியார் துறையின் செயற்பங்களிப்பை பெற்றுக்கொள்ளல், உற்பத்திப் பெருக்கத்தையும் போட்டித்தன்மையையும் அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சியை நோக்காக கொண்ட வள முகாமைத்துவம் அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் அவற்றுள் முதன்மையாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள செயற்படுவது என்பதன் அர்த்தம் இலங்கையை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் நாடாக உருவாக்கும் எமது முதல் கொள்கையை நிறைவேற்றிக்கொள்வதேயாகும்.
எமது இரண்டாவது கொள்கை அரசியல் ஸ்திரத்தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வதாகும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற செயல்வினைமிக்க அரச தந்திரத்தை உருவாக்குவது மூன்றாவது குறிக்கோளாகும்.
எனது ஆட்சிக்காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட வெற்றிகளை பெறுவதே எனது ஒரே எண்ணமாகும்.
என்னால் 2015 செப்டம்பர் முதலாம் திகதி உங்கள் முன் ஆற்றப்பட்ட தலைமை உரையின் சாரம் இதுவாகும். அன்று நாம் கூறியது நீங்கள் இதுவரை எந்தவித பாராளுமன்ற உறுப்பினரும் முகங்கொடுக்காத மாற்றத்திற்கான யுகத்தின் படைப்பாளிகள் என்றாகும். மாற்றத்திற்கான யுகம் எப்போதும் கடுமையான மற்றும் விரும்பத்தகாத காலகட்டமாகவே உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
இன்று சகல இலங்கை மக்களும் சௌபாக்கியத்தின் சுதந்திரத்தினை பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர். இலஞ்சம், ஊழல், மோசடி, வீண்விரயம் என்பவற்றிற்கு எதிராக செயற்படுதல் தேசத்தின் எதிர்காலத்திற்கான தற்பாதுகாப்பாகும்.
இன்று ஆரம்பமாகும் இந்த புதிய அமர்வினை அந்த எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பமாகவே கருதவேண்டும்.
இலங்கையில் வருடாந்தம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சத்து முப்பத்தோறாயிரம் ஆகும். வருடாந்தம் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து முப்பத்தோறாயிரம் ஆகும். அதற்கேற்ப எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் வருடாந்தம் சுமார் இரண்டு இலட்சம் அளவில் அதிகரிப்பு ஏற்படுகின்றது. எமது புதிய தலைமுறையினருக்கு இலக்குகள் காணப்படுகின்றன. கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் இலக்குகள் காணப்படுகின்றன.
அதேபோல் நாட்டிற்கும் இலக்குகள் காணப்படுகின்றன.
அன்று நான் அரசாங்கத்திலிருந்து விலகி மக்களின் ஆசீர்வாதங்களுடன் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியமைக்கு தேசத்தின் எதிர்காலமும் எமது தாய் நாட்டின் உன்னதமான குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட தீர்க்கமான உறுதியான இலக்குகளை நிறைவேற்றக்கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாடுமே காரணமாக அமைந்தது.
தொடர்........
தொடர்........
0 comments:
Post a Comment