17 ஆண்டுகளில் சீனாவிடம்
7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள இலங்கை



கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, இலங்கை 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக, வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2001ஆம் ஆண்டில் இருந்து. 2017 டிசெம்பர் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.
இரண்டு வசதிகளின் கீழ் சலுகை அளிக்கும் ஒரே சீன நிதி நிறுவனம், சீனா எக்சிம் வங்கியே என்று, வெளியக வளங்கள் திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கடன்கள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீன அரசாங்கத்தின் கடன் வசதியின் கீழ் 1,907 மில்லியன் டொலர் சலுகைக் கடன் பெறப்பட்டுள்ளது.
மேலும், 3,677 மில்லியன் டொலர், வாங்குபவர் முன்னுரிமை கடன் வசதியின் கீழ் பெறப்பட்டுள்ளது.
மேலும், 1,634 மில்லியன் டொலர்,  சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து வாங்குபவர் கடன் வசதியின் மூலம் பெறப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களில், முக்கியமான பாரிய திட்டங்களான, புத்தளம் அனல் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், தாமரைக் கோபுரம், அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top