ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்?
ராஜபக்ஸக்களின் குடும்ப மோதலால் முடிவாம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன
முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள
பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முடிவு செய்துள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக
ராஜபக்ஸ குடும்பத்துக்குள்
ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஸ இந்த முடிவை எடுத்துள்ளார் என்று
கூறப்படுகின்றது.
ஜனாதிபதி
வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ஸ குடும்பத்துக்குள் கோத்தாபய ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம்
பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த
நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிசை
ஜனாதிபதி தேர்தலில்
நிறுத்த மஹிந்த ராஜபக்ஸ முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment