புதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும்
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
புதிய
இராஜாங்க அமைச்சர்கள்
இருவரும் பிரதி
அமைச்சர்கள் ஐவரும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்
பதவிப்பிரமாணம் செய்தனர்.
அவர்களின்
பெயர் விபரங்கள்
வருமாறு:
இராஜாங்க
அமைச்சர்கள்
01. ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி,
கிறிஸ்தவ சமய
அலுவல்கள் இராஜாங்க
அமைச்சர்
02. லகீ ஜயவர்த்தன – மலைநாட்டு புதிய
கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்,சமூக அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர்
பிரதி
அமைச்சர்கள்
01. அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் துறை
பிரதி அமைச்சர்
02. அங்கஜன் ராமநாதன் - விவசாயத்துறை பிரதி
அமைச்சர்
03. காதர் மஸ்தான் - மீள் குடியேற்றம்,
புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,இந்து சமய
அலுவல்கள் பிரதி
அமைச்சர்
04. எட்வட் குணசேக்கர – உள்நாட்டு அலுவல்கள்,
வடமேல் மாகாண
அபிவிருத்தி பிரதி அமைச்சர்
05. நலின் பண்டார ஜயமஹ - பொது
நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும்
பிரதி அமைச்சர்
இவர்களில்,
அங்கஜன் இராமநாதன்
மற்றும் காதர்
மஸ்தான் ஆகியோர்,
சிறிலங்கா சுதந்திரக்
கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏனைய ஐவரும்,
ஐதேகவைச் சேர்ந்தவர்கள்.
கிறிஸ்தவ
மத விவகார
இராஜாங்க அமைச்சராக,
பௌத்தரான ரஞ்சித்
அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
New State and Deputy Ministers
sworn in before President
Two new State Ministers and five
Deputy Ministers were sworn in before President Maithripala Sirisena at the
Presidential Secretariat, today (June 12).
The names and ministries are as
follows:
State Ministers
01 Hon. Ranjith Aluwihare
Minister of Tourism Development and Christian Religious Affairs
02. Hon. Lucky Jayawardena
Minister of Hill Country New Villages, Infrastructure and Community Development
Deputy Ministers
01 Hon. Ajith Mannapperuma Deputy
Minister of Environment
02.Hon. Angajan Ramanathan Deputy
Minister of Agriculture
03.Hon. Cader Mastan Deputy
Minister of Rehabilitation, Resettlement, Northern Development and Hindu
Religious Affairs
04.Hon. Edward Gunasekara Deputy
Minister of Internal Affairs and Wayamba Development
05.Hon. Nalin Bandara Jayamaha
Deputy Minister of Public Administration and Management and Law and Order
0 comments:
Post a Comment