நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின்
தொழிற்சங்க நடவடிக்கை முடிவு



25% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரஊப் ஹக்கீம் மற்றும் அமைச்சின் செயலாளருடன் நேற்று (06) தங்களது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அதற்கான இணக்கம் பெறப்பட்டதை அடுத்து குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையிலும், அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் அனுமதிக்கு அமைய, 2017 டிசம்பர் மாத அடிப்படைச் சம்பளத்தின் 5% கொடுப்பனவை (கடந்த 3 வருட முன்னேற்றத்திற்கு அமைய) தற்போது வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5% கொடுப்பனவை இரண்டு கட்டங்களில் வழங்குவதற்கும், முதலாம் கட்டமாக உடனடியாக 3% உம், மிகுதி 2% இனை அடுத்த கட்டமாக எதிர்காலத்தில் வழங்குவதற்கும் முடிவு செய்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வி. ஹப்புஆரச்சி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top