புனித ரமழானின் இறுதி பத்து
நோன்பின் மாண்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில்
பள்ளிவாயலுடன் நம்மை இணைத்துக் கொள்வோம்
அமைச்சர் ரிசாத் பதியுதீன்
முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை
புனித ரமழானின்
இறுதி பத்தில் இருக்கும்
நாம் நோன்பின்
மாண்புகளை
பெற்றுக்கொள்ளும் வகையில் பள்ளிவாயலுடன் நம்மை இணைத்துக் கொள்ள
வேண்டும் என
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிசாத் பதியுதீன் முஸ்லிம்
சமூகத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகஅமைச்சர் ரிசாத் பதியுதீன்
மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம்
மிகவும்
ஆவலுடன் எதிர்
பார்த்த இந்த
வருட
ரமழான் எம்மை
அடைந்து அல்ஹம்துலில்லாஹ் இப்போது
மிகவும்
மகத்துவம்
பொருந்திய இறுதிப்பத்தை அடைந்துள்ளோம்.
அதில்
நாம் மிகவும் ஈடுபாட்டுடன் இறைவனோடு நம்மை இணைத்துக்
கொள்வது
அவசியமாகும். முஹம்மது
நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்கள் ரமழானின்
இறுதிப்பத்து
வந்து
விட்டால் பள்ளிவாயலில்
இஃதிகாப் இருப்பது, இரவு வணக்கம் என தொடர் வணக்கத்தில்
ஈடு படுவார்கள்
என்பதை
நாம் தெரிந்து
வைத்துள்ளோம்.
அந்த
வகையில்
முஸ்லிம்கள்
நாம் வீணான
விளையாட்டுக்கள், பிரயோசனமற்ற வகையில்
முக நூலில்
மூழ்கிக்கிடப்பது, வட்ஸப்புகளில் அரட்டையடிப்பது போன்ற
செயல்களை விட்டும்
தவிர்த்து
எவ்வளவுக்கு எவ்வளவு இந்த ரமழானின்
இறுதிப்பத்தின்
நன்மைகளை அடைந்து
கொள்ள முடியுமோ
அந்த அளவுக்கு முயற்சி செய்யும்
படிஎல்லாம் வல்ல
அல்லாஹ்வுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் நிம்மதிக்காககவும் பலஸ்தீன்,
மியன்மார்
போன்ற முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்க்கைக்காக
பிரார்த்தனைகளில் ஈடுபடும்படியும்
முஸ்லிம் சமூகத்தை
குறிப்பாக இளைஞர் யுவதிகளை அன்பாய் கேட்டுக்கொள்வதாக
அமைச்சர்
ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment