ஜனாதிபதி விமர்சித்தாலும் கூட்டு அரசு தொடரும்
ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை நடந்த, இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.
ஆனாலும், மக்களின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கம் , 2020 ஓகஸ்ட் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
கூட்டு அரசின் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து நாம் எமது கடமையை நிறைவு செய்வோம்.
நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்என்றும், அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகர் கருஜயசூரிய, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் காசீம், எம் எச்.ஏ.ஹலீம், பைஸர் முஸ்தபா, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ். பைஸல் காசீம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top