இலங்கையில் சிகரெட் விற்பனையை நிறுத்திய
107 நகரங்கள்
இலங்கையில்
107 நகரங்கள் சிகரெட் விற்பனையைப் புறக்கணிப்பதாக,
சுகாதார அமைச்சை
மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம்
செய்தி வெளியிட்டுள்ளது.
புகையிலை
இல்லா நாட்டை
உருவாக்கும் இலக்கை அடையும் நோக்கில், 100இற்கும்
அதிகமான நகரங்களில்
உள்ள விற்பனையாளர்கள்
சிகரெட் விற்பனையைப்
புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
சுகாதாரப்
பரிசோதகர்கள் மேற்கொண்ட தீவிர பரப்புரையை அடுத்து, வியாபார நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் சிகரெட் விற்பனையை நிறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்
அதிகபட்சமாக 22 நகரங்களிலும், மாத்தறையில்
17 நகரங்களிலும், குருநாகலவில் 16 நகரங்களிலும்,
சிகரெட் விற்பனை
முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது
107 நகரங்கள் இந்த முடிவில் இணைந்துள்ளன.
2019ஆம் ஆண்டில் இந்த நகரங்களின்
எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்ன
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில்
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில்
பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
புகையிலைப்
பொருlட்களுக்கு
90 வீதம் வரை
வரி அதிகரிக்கப்பட்டதுடன்,
சிகரெட் பொதிகளில்
80 வீதம் எச்சரிக்கை
படம் அச்சிடப்பட்டிருக்க
வேண்டும் என்றும்,
உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளின்
இருந்து 100 மீற்றர் சுற்றாடலில் சிகரெட் விற்பனை
தடை செய்யப்பட்டுள்ளதுடன்,
பொது இடங்களில்
புகைப்பதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2020இல் புகையிலை பயிர்ச்செய்கையை தடை
செய்வதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment