மஹிந்தவின் சகோதரருக்கு
நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய மைத்திரி
குடும்ப உறவினர்களுக்கும் ஆறுதல் சொன்னார்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் சகோதரருக்கு இறுதி
அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன வீரகெட்டிய மெதமுலன வீட்டிற்கு இன்று (25) காலை நேரில் சென்றுள்ளார்.
சமகால
ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜக்ஸ, கோட்டாபய
ராஜபக்ஸ, உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்தார்
இதன்போது
மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல்
ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முன்னாள்
சபாநாயகர் சமல்
ராஜபக்ஸவும்
கோட்டாபய ராஜபக்ஸவும் உடனிருந்தார்கள்.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின்
சகோதரர் சந்திரா
டியுடர் ராஜபக்ஸ
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.
அவரின் இறுதி
நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதேவேளை
முன்னாள் ஜனாதிபதி
வீட்டை நோக்கி
பெருமளவு அரசியல்வாதிகள்
உட்பட ஆதரவாளர்கள்
படையெடுத்து வருகின்றனர்.
இதன்
காரணமாக தெற்கு
அதிவேக நெடுஞ்சாலையில்
வாகன நெரிசல்
ஏற்பட்டுள்ளது.
தெற்கு
அதிவேக நெடுஞ்சாலையின்
கடவெல, பின்னடுவ,
வெலிபன்ன மற்றும்
மாத்தறை பகுதிகளில்
நீண்ட வரிசையில்
வாகனங்கள் தரித்து
நிற்கின்றன.
0 comments:
Post a Comment