பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளான
இலங்கைப் போக்குவரத்து சபைக்குசொந்தமான பஸ்
ஒருவர் பலி - 34 பேர் காயம்
பதுளை,
அலுகொல்ல பிரதேசத்தில்
இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த
விபத்தில் கந்தேகெதர,
வீரகமவைச் சேர்ந்த
மொஹமட் றிழ்வான்
மொஹமட் ஆகில்
எனும் சிறுவன்
உயிரிழந்துள்ளதோடு, மேலும் 34 பேர்
காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தகெதர
பகுதியில் இருந்து
பதுளை நோக்கி
பயணித்த இலங்கை
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் இன்று காலை பள்ளத்தாக்கு
ஒன்றில் விழுந்தமையினால்
இந்த அனர்த்தம்
ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்தவர்கள்
சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர்
ஆபத்தான நிலையில்
உள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான குறித்த பஸ், சாரதியின் கவனமற்ற செலுத்துகை காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.






0 comments:
Post a Comment