ஏ.எல். தவம்  அவர்களின் முகநூலும்
அநாகரிகமான பதிவுகளும்




·         Studied at South Eastern University of Sri Lanka
·         Lives in Akkaraipattu
·         From Akkaraipattu
·         In a civil union
  • கட்சியின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்
.
முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். தவம்  அவர்களின் முக நூலில் அண்மைக்காலமாக பதிவிடும் பதிவுகள்  அநாகரிகமான சொற்களுடன் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக அமையப்பெற்றுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி அவர் தனது முகநூலில் இட்டுள்ள பதிவு மிகவும் நாகரீகம் குறைந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாக கொண்டதாக கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் இந்த நிலையை தொடர்ந்தால், இதனை பார்த்து எமது இளைஞர்களும் மிகவும் கேவமானசொற்களை இவரின் கருத்துக்கு எதிராகப் பதிவிட்டு எல்லோரும் அசிங்கமாகிவிடக்கூடிய நிலை ஏற்படும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
 பிரதி அமைச்சர் ஹரீசை கழுவுவோர், நீங்கள் கல்முனை பிரதேசத்தில் புடுங்கிய ஒன்றை கூறுங்கள் என்பதே அவரது முகநூல் பதிவாகும். இன்னும் அவரின் ஒரு கருத்து "ஒன்றுக்கும் இயலாது; முட்டையில் மயிர் புடுங்க கடும் விருப்பம் நம்மில் சில முல்லாக்களுக்கு"
இப்படியும் அவரின் மற்றும் ஒரு கருத்து "முடிவெடுக்க மூடிய அறைக்குள் சண்டையிடுவோம். முடிவு எடுத்ததுடன் முசாபாஹ் செய்வோம்- SLMC சகோதரத்துவம் -".
கல்முனைப் பிரதேசத்தில் அபிவிருத்தி வேண்டும் என்று கருத்துக்களைப் பதிவிடுபவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஏ.எல். தவம்  அவர்கள் இவ்வாறு அசிங்கமாக கருத்துக்களை பதிவிடக்கூடாது.
இதனை பார்வையிடுகின்ற  முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான ஒரு மாற்று கட்சி இளைஞன்,இதற்கு எவ்வாறு பதிலளிக்க முற்படுவான். இதனை பார்வையிடுகின்ற இளைஞன் எவ்வாறு வழி காட்டப்படுவான். இவற்றை பார்வையிடுகின்ற மாற்று சமூகம் எம்மை எவ்வாறு கணக்கிடும்? என்பதை தவம் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பதிவிடுவதில் முஸ்லிம் காங்கிரஸ் நிர்வாகிகள் நாகரிகத்தை வெளிப்படுத்த வேண்டும். அதிலிருந்து தவம்  மீறி செயல்பட்டுவருவதாக அவர்மீது குற்றம் சாட்டப்படுகின்றது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top