2018-.08.28
ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.
அமைச்சரவை தீர்மானங்கள்.
01. கல்கிசையிலிருந்து அங்குலான வரையிலான கடற்கரை மற்றும் கீழிறங்கும் நிலையிலுள்ள களுகங்கை நதி கடலுடன் கலக்கும் பகுதியில் இடம்பெறும் கடல் அரிப்பையும் தடுப்பதற்கு மணல் மூலமான பாதுகாப்பு அரணை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 05 ஆவது விடயம்)
தெற்கு கொழும்பு மணல் வள திட்டத்தின் கீழ் கல்கிசையிலிருந்து அங்குலான வரையிலான கரையோரப் பகுதியை நிலையானதாக அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இயற்திரவியல் மணல் முறையை பயன்படுத்தி கல்கிசையிலிருந்து அங்குலான வரையிலான கரையோரப் பகுதியை நிலையானதாக அமைப்பதற்கும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாவிக்கப்பட்ட களுகங்கை முகத்துவார பகுதியை மீண்டும் அமைப்பதற்காக மணல் மூலமான பாதுகாப்பு அரண் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கையில் அரச – தனியார் புரிந்துணர்வுக்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல். (நிகழ்ச்சி நிரலில் 06 ஆவது விடயம்)
அரச தனியார் புரிந்துணர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கென தேவையான கட்டமைப்பொன்றை மேம்படுத்துவதற்கும் அதற்கு தேவையான அடிப்படை வசதி நிதியளித்தல் ஆகியவற்றுக்கு உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இது தொடர்பிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையை எட்டுவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. 2018 ஆம் ஆண்டுக்கான அரச நத்தார் வைபவத்தை மன்னார் பதவி நிலையை அடிப்படையாகக் கொண்டு நடத்துதல். (நிகழ்ச்சி நிரலில் 07 ஆவது விடயம்)
அரச நத்தார் தின வைபவம் ஒவ்வொரு வருடமும் அருட்தந்தையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதவியில் உள்ள பேராயர் அவர்களின் தலைமையிலும் ஆலோசணையிலும் நடத்தப்படுகின்றது. இதற்கமைவாக அனைத்து இனங்களுக்கும் உட்பட்ட பொதுமக்கள் வாழும் மன்னார் பிரதேசத்தில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இவர்கள் மத்தியில் மத நல்லிணக்கததை ஏற்படுத்தும் நோக்கிலும் 2018 அரச நத்தார் தின வைபவம் சமிந்து உபத்தயி நத்தால் சிரியாய் என்ற தொனிப் பொருளில் மன்னார் கத்தோலிக்க பதவிநிலையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இதற்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2021 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துதல். (நிகழ்ச்சி நிரலில் 12 ஆவது விடயம்)
நீண்டகாலமாக இலங்கையின் அபிவிருத்தியில் பங்குதாரராக பங்களிப்பு செய்து வரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2021 ஆம் ஆண்டின் வருடாந்த கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கான அனுசரணையை வழங்குவதை ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தெரிவிப்பதற்கும் இந்தப் பணிக்காக தேசிய கண்காணிப்பு குழுவொன்றும் துணை குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05 1982 ஆம் ஆண்டின் இலக்கம் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 16 ஆவதுவிடயம்)
இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் பணிகள் மற்றும் நிருவாக தயாரிப்புக்களை தற்போதைய தேவைக்கு பொருத்தமான வகையில் தயாரித்துக்கொள்வதற்காக தேவையான திருத்தங்களை உள்ளடக்கி 1982 ஆம் ஆண்டில் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிறுவன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளபடவுள்ளது. இதற்காக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06 பெருந்தோட்டத்துறையில் செயல் திறனுக்காக 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச புதிய திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
தேயிலை, இறப்பர் மற்றும் தெங்குத் துறைக்குட்பட்ட தயாரிப்பு ஏற்றுமதியூடாக 2017 ஆம் ஆண்டில் 457.85 பில்லியன் ரூபாவை வருமானதாக பெற முடிந்தது. அத்தோடு இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக பல்வேறு தரப்பினரின் சேவை மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டுமென்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக இரட்டை தெங்கு விதை தயாரிப்பு முதலானவற்றுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் அறுவடை மற்றும் செயல்திறனை நவீனமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் இலங்கையில் இரசாயன மூலமான அனர்த்தத்தை அடையாளம் காண்பதற்கான நடைமுறையை மதிப்பீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம்)
இலங்கையில் இரசாயன பொருட்களினால் ஏற்படும் திடீர் விபத்துக்களில் பெரும்பாலானவை தொடர்பில் தெளிவு இல்லாமை அவற்றை பயன்படுத்தும் இடம் 'சுற்றாடலை உரிய முறையில் முன்னெடுக்காமை மற்றும் மதிப்பீடு மற்றும் தவறான கைத்தொழில்முறையைப் பயன்படுத்துவதனால் ஏற்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வாக இரசாயன அனர்த்தத்துக்கு முறையான அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பொன்றை வகுப்பதற்கு தேவையான சந்தர்ப்பத்தை கவனத்தில் கொண்டு இலங்கையில் இரசாயன அனர்த்த நிலைமையை அறிந்துகொள்வதற்கான மதிப்பீடு ஒன்றை 2019 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கொள்வதற்காக நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மற்றும் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. மகாபொல உயர்கல்வி புலமைப் பரிசுக்கான பொறுப்பு நிதியம் கொண்டுள்ள முதலீட்டை முறையாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 35 ஆவது விடயம்)
சிறப்புரிமைகள் கிடைக்கப்பெறாத இளைஞர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் அதற்கான வசதிகளை வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்டவை உயர் கல்வி புலமைப் பரிசிலுக்கு பொறுப்பான நிதியத்தின் நோக்கமாகும். மகாபொல முக்கிய நிதியத்தை வலுப்படுத்துவதற்காக அதன் நிதியை முதலீடு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் முதலதனவை மகாபொல நிதியத்தின் முழுமையான உரிமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நெசனல் வெல்த் கோப்ரேசன் லிமிட்டெட் நிறுவனம் மற்றும் நெசனல் வெல்த் சிக்குரிடிஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இந்த நிறுவனங்களின் செயற்பாடுகளின் காரணமாக மகாபொல நிதியத்துக்கு நன்மையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதினாலும் மகாபொல நிதி கொண்டுள்ள முதலீடுகளை மிகவும் முறையாக முன்னெடுப்பதற்காகவும் மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிறுவனங்களையும் கலைத்து மகாபொல உயர் கல்வி புலமைப் பரிசில் நிதியம் கொண்டுள்ள அனைத்து நிதியையும் அரச வங்கி மற்றும் மத்திய வங்கி பிணை முறிகளின் மாத்திரம் முதலீடு செய்யப்படவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்பள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 1981 ஆம் ஆண்டு இலக்கம் 66 இன் கீழான மகாபொல உயர் கல்வி புலமைப் பரிசில் பொறுப்பு நிதியத்தின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல் (நிகழ்;ச்சி நிரலில் 36 ஆவது விடயம்)
அரசாங்கத்தின் உயர் நிறுவனங்களின் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவியை வழங்கும் மகாபொல உயர் கல்வி புலமைப் பரிசில்களை ஒழுங்குறுத்தும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 66 இன் கீழான மகாபொல உயர் கல்வி புலமைப் பரிசில் பொறுப்ப நிதியத்தின் சட்டத்தின் பெயரை 1981 இலக்கம் 66 இன் கீழான லலித் அத்துலத் முதலி உயர் கல்வி புலமைப் பரிசில் பொறுப்பு நிதியமாக மாற்றுவதற்காக திருத்தத்தை மேற்கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவவ்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. விளையாட்டுத்துறைக்கான பாடசாலைகளில் புலமைப் பரிசாளர்களுக்கு போசாக்கு கொடுப்பனவை வழங்கும் நிதியில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 39 ஆவது விடயம்))
விளையாட்டுத்துறையில் ஆற்றல் மிகுந்த மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வீரர் வீராங்கணைகளை உருவாக்கும் நோக்கில் விளையாட்டுத்துறைக்கான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு போதுமான போசாக்கை வழங்கும் நோக்கில் ஒரு மாணவருக்காக வழங்கப்படும் மாதாந்த போசாக்குக்கான கொடுப்பனவு 2500 ரூபாவிலிருந்து
5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்; வழங்கியுள்ளது.
11. 2019 துரித தபால் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 41 ஆவது விடயம்))
2019 துரித தபால் சேவை) தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாடு வெளிநாட்டு பிரதி நிதிகளின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையில் நடத்படவுள்ளது. இதற்காக தபால் ,தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. கட்டுபெத்த கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 52 ஆவது விடயம்)
கட்டுபெத்த கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனத்தினால் இயந்திரம் நிர்மாணித்தல் மர வேலைகள் போன்ற துறைகளில் கீழ் தேசிய தொழில் பயிற்சி (Nஏஞ) 04 மட்டத்தில் 3வருட கால முழுமையான கற்கைநெறி மற்றும் ஒரு வருட காலத்திற்கு கணனி கற்றல் பயிற்ச்சி நெறியும் நடத்தப்படுகின்றது. தொழில் வாய்ப்பு சந்தைக்கு பொருத்தமான கற்கைநெறிகளைக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அவுஸ்திரேலியாவின் நிவாரண கடன் பரிந்துரை நடைமுறையின் கீழ் நிதி வசதிகளை பெற்றுக்கொண்டு இந்த நிறுவனம் 2400 மில்லியன் ரூபா முதலீPட்டுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக விரிவான திட்டப் பரிந்துரையை கோருவதற்கும் இதற்குத் தேவையான வெளிநாட்டு நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கும் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு செயல்திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் மலையக உரிமைகள் தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்;;;;த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கொலன்னாவ கால்வாயை திருப்புவதற்கான ஆலோசனை முறை - (நிகழ்ச்சி நிரலில் 59 ஆவது விடயம்)
கொழும்பு மாநகரத்துக்கு அருகாமையில் மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 4.8 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட கொலன்னாவ கால்வாயை திருப்புவதற்கான பிரேரணையில் துணை பிரிவு 4 இன் கீழ் 3000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மூன்று கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவினால் சிபாரிசுக்கு அமைய (நுகூஊ) நிறுவனம் மற்றும் சுரூஊ நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணைந்த திட்டத்திற்கு அமைவாக 1004.4 மில்லியன் ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாதிரி கிராமங்கள் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக எட்டு கிராமிய பாலங்களை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைந்த கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களின் வீட்டுப் பயனாளிகளுக்கு நாகரீக பொது வசதிகளை இலகுவாக அடையக் கூடிய வகையில் ரம்புகவௌ வெலிக்கந்த – ஊடாக பாலம் முவான்வௌ, வீரவில ஆற ஊடான பாலம,; பன்னேகமுவ மற்றும் அபெபுர ஊடாக தியபெதிய பாலம் அம்பலாங்தொட்ட லியங்கஸ்தொட்ட மற்றும் பெதிகன்தொட்ட ஊடான பாலம,; தனமல்வில வீதியில் மலல ஆற, ரத்முத்துவௌ பாலம், இறப்பர் வத்த மற்றும் உடுவில இடையிலான பாலம், கட்டுவன கெசல்வத்த பாலம், மற்றும் லுணுகம்வெர தெற்கு ஊடான பாலம், ஆகிய எட்டு கிராமிய பாலங்கள் நகமுபுரவர என்ற வேலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. 2018 ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பெயரிடுதல் (நிகழ்ச்சி நிரலில் 69 ஆவது விடயம்)
கடந்த வருடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற சீரற்ற கால நிலை காரணமாக பின்னடைவைக் கண்ட விவசாய நடவடிக்கைகளை புதிய உத்வேத்துடன் ஆரம்பிப்பதற்காக வண்டல் மண் நிரம்பியுள்ள வயல்களில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய வகையிலும் உற்பதியை மேற்கொள்ளக்கூடிய ஏனைய அனைத்து காணிகளையும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கும் உற்பத்திகளுக்கான மற்றும் உற்பத்திகளுக்கு தேவையான விதை, கன்றுகள், பொருட்கள், போன்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சுற்றறிக்கை மூலமான ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விடயம் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment