எங்கள் மீதான தடைக்கு
அணு ஆயுதம் மட்டும் காரணம் கிடையாது.
எங்களை அவர்கள் காலில் மண்டியிட வைக்க வேண்டும்
என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்’
சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வாதம்
புதிய
பொருளாதார தடை
மூலம் எங்களை,
அவர்கள் காலில்
மண்டியிட வைக்க
வேண்டும் என்று
அமெரிக்கா நினைக்கிறது
என்று சர்வதேச
நீதிமன்றத்தில் ஈரான் புகார் கூறியுள்ளது.
ஈரானுடனான
அணுசக்தி ஒப்பந்தத்தில்
இருந்து வெளியேறுவதாக
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த
மே மாதம்
அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு
பொருளாதார தடைகளையும்
விதித்தார். இதனால் ஈரான் பொருளாதாரம் நிலைகுலைந்து
போய் உள்ளது.
இந்த தடைகளை
எதிர்த்து சர்வதேச
நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த
வழக்கின் மீது
நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக்
நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது ஈரான்
அரசு தங்கள்
தரப்பு நியாயத்தையும்,
அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்
விளக்கி கூறியது.
ஈரான்
சார்பில் ஆஜரான
வக்கீல்கள் வாதிடுகையில்,
‘‘அமெரிக்கா
விதித்துள்ள தடைகள் சீர்ப்படுத்த முடியாத அளவிற்கு
மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய தடைகளை
விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது. அமெரிக்காவின்
நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு
வழங்க உத்தரவிட
வேண்டும். ஏனெனில்
அமெரிக்க தடையால்
எங்கள் பொருளாதாரம்
பேரழிவை சந்தித்து
விட்டது. எங்கள்
மீதான தடைக்கு
அணு ஆயுதம்
மட்டும் காரணம்
கிடையாது. எங்களை
அவர்கள் காலில்
மண்டியிட வைக்க
வேண்டும் என்பதுதான்
அமெரிக்காவின் விருப்பம்’ என்று வாதிட்டனர்.
ஈரான்
தரப்பு வாதம்
நேற்றுடன் முடிந்தது.
இன்று அமெரிக்க
தரப்பு வக்கீல்கள்
தங்கள் வாதத்தை
சர்வதேச நீதிமன்றத்தில்
முன்வைக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment