நாட்டின்
ஜனாதிபதி, பிரதமர், அரசியல்வாதிகள், அதிகாரிகள்
விமான
முதல் வகுப்பில் பிரயாணிக்கக் கூடாது
பிரதமர்
இம்ரான் அமைச்சரவை அதிரடி
கடும் நிதிச்சிக்கல் உள்ள சூழலில் தத்தளித்து வரும்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் செலவுகளைக் குறைக்க பல
அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அரசு கஜானாவிலிருந்து
செலவழித்து விமான முதல் வகுப்பில் பிரயாணம் செய்யக் கூடாது என்று தடை
விதித்துள்ளது பிரதமர் இம்ரான் அமைச்சரவை.
பிரதம இம்ரான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த
அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் பிரதமரும் அயல்நாட்டு, உள்நாட்டுப் பயணங்களுக்கு தனிவிமானத்தைப்
பயன்படுத்தி அரசின் பணத்தை வீணடிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“அனைத்து முதன்மை அரசு அதிகாரிகள், ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, செனட் சேர்மன், தேசிய மக்களவையின் சபாநாயகர், முதலமைச்சர்கள் ஆகியோர் பிசினஸ் கிளாஸில்
பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவத் தளபதியும் முதல் வகுப்பைப் பயன்படுத்துவதில்லை,
பிசினஸ் கிளாஸில்தான்
பயணிப்பதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முந்தைய பிரதமர்
நவாஸ் ஷெரிப் ஆண்டொன்றுக்கு 51 பில்லியன் டாலர்களை தன் விருப்பநிதியிலிருந்து செலவிட்டுள்ளார்.
அதே போல் இம்ரான் கான் தனக்கு இரண்டே இரண்டு சேவகர்கள்
போதும் என்றும் 2 வாகனங்கள்
போதும் என்றும் கட்டுப்பாடு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசு பஞ்சாப்-கைபர் பத்துன்க்வா பகுதியில்
மேற்கொண்ட மிகப்பெரிய போக்குவரத்துத் திட்டங்கள் அனைத்தின் மீதும் தணிக்கை
நடத்தவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment