ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணம் – மயிலிட்டி
மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு
மீள் கட்டியெழுப்பும் பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மயிலிட்டி
துறைமுகத்திற்கு சென்றுள்ளார்.
400 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும்
மயிலிட்டி மீன்பிடி
துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை இதன்போது
ஜனாதிபதி ஆரம்பித்து
வைத்தார்.
யுத்தத்திற்கு
முற்பட்ட காலத்தில்
இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில்மயிலிட்டி
துறைமுகம் 3 இல் ஒரு பங்கு பங்களிப்பு
செய்துள்ளது.
அந்த
வகையில் இன்று
காலை 10 மணியளவில்
மயிலிட்டி மீன்பிடி
துறைமுகத்தின் அபிவிருத்திக்கான அடிக்கல்லினை
ஜனாதிபதி நாட்டி
வைத்ததுடன், பெயர் பலகையை திரை நீக்கம்
செய்து வைத்தார்.
இதற்காக
செலவிடப்படும் தொகை 400 மில்லியன் ரூபாவாகும். இதுதொடர்பிலான
நிகழ்வுகள் நவோதயம் எனும் பெயரில் இடம்பெற
உள்ளன. வடக்கில்
மீனவ சமூகத்தை
ஊக்குவிக்கும் நோக்கில் 2 பிரதான துறைமுகங்கள், 4 இறங்குதுறைகள்
மற்றும் 5 மீன்பிடி
துறைகளைக் கொண்டதான
இந்த புனரமைப்புப்
பணிகள் முன்னெடுக்கப்பட
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்டப் பிரேரணையின் கீழ், 150 மில்லியன் ரூபா நிதி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் ஆழப்படுத்துதல், அலைதடுப்புக் கட்டுமானம், இறங்குதுறை புனரமைப்பு, எரிபொருள் நிரப்பு நிலையம், குளிரூட்டப்பட்ட அறைகள், நீர் மற்றும் மின்சார விநியோகம் ஆகியனவும் இந்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment