ஆடம்பரமான கார்களில் சுற்றித்திரியும்
அரசியல்வாதிகள்
இலங்கை அரசியல்வாதிகள் நாட்டின் அப்பாவி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இவர்கள் தமக்கான தேவைகளை மாத்திரம் நிறைவேற்றி கொள்வதாகவும் அரசியல் நோக்கர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கையை வாழும் சில அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வாகன இறக்குமதிக்கான வரிச்சலுகை அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்து அதில் பணம் சம்பாதிக்கின்றனர்.
மேலும் சிலர் கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்து சுகபோகமாக பயணம் செய்கின்றனர்.
எனினும் இவர்களுக்கு வாக்களித்து, தெரிவு செய்த வாக்காளர்கள் பொது போக்குவரத்துக்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.
போதா குறைக்கு அடிக்கடி நடக்கும் பணிப்புறக்கணிப்புகள் காரணமாக உரிய நேரத்தில் வீடுகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல முடியாமல் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் தமக்கான பிரதிநிதியை சரியாக தெரிவு செய்ய வேண்டியது பொதுமக்களின் கடமை.
அந்த கடமை தவறும் போது மக்கள் இன்னல்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமை ஏற்படுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், நாட்டின் அப்பாவி மக்களின் வரிப் பணத்தில் ஆடம்பரத்தை அனுபவித்து, இறுதியில் மக்களிடம் தமது குணத்தை காட்டும் மோசமான அரசியல்வாதிகளை விரட்டி விட்டு, சாதாரண குடிமகனை ஆட்சியாளராக கொண்டு காலத்தை உருவாக்க வேண்டும் என முகநூலில் ஒருவர் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆடம்பரமான கார்களில் செல்லும் புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
0 comments:
Post a Comment