கல்முனை ஸாஹிறாவையும் கண் திறந்து பாரும் ஐயா
கல்முனை பிரதேச மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வளர்வததற்கு இரத்தம் சிந்தி பல வகைகளிலும்
துன்பப்பட்டு பாடுபட்ட கட்சிப் போராளிகள் அதிகம்
உள்ள கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில், அக்கரைப்பற்று பிரதேச பாடசாலைகளுக்கு
பல தேவைப்பாடுகள் உள்ளன.
குறிப்பாக கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் விளையாட்டு மைதானம்
சீரமைப்பு மற்றும் மாணவர்களுக்கான கட்டட வசதிகள் என்பன போன்ற பல பெளதீக வள தேவைப்பாடுகள்
உள்ளன.
இது போன்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள
பாடசாலைகளிலும் பெளதீக வள தேவைப்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சரான முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரே!
தேர்தல் காலங்களில் விஜயம் செய்வது போன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்
பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து இங்குள்ள பாடசாலைகளில் நிலவும் பெளதீக
வள தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கண் திறந்து பாரும் ஐயா என இப்பிரதேச மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
செய்தி
நாவலப்பிட்டி சென். மேரிஸ் கல்லூரிக்கு
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விஜயம்
கல்லூரியின் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்
நாவலப்பிட்டியில் அமைந்துள்ள மிகவும் பழைமைவாய்ந்த சென். மேரிஸ் கல்லூரிக்கு நேற்று (30) விஜயம்செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கல்லூரியின் பெளதீக வள தேவைப்பாடுகள் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடினார்.
பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பான அறிக்கை இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி, புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.
0 comments:
Post a Comment