நேரு, மோடியாக மாறிய
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்!
வியந்து பார்க்கும் முஸ்லிம் சமூகம்!!

மன்னார், எருக்கலம்பிட்டியில் ஏற்பாடு செய்த ஒரு  விழாவின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தற்போதய இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடைக்கு சமமான ஆடை ஒன்றை அணிந்தது குறித்து முஸ்லிம் மக்களால் அதிகம் பேசப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அந்த விழாவில் அணிந்திருந்த ஆடை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தற்போதய இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடைக்கு சமமான ஆடை ஒன்றையே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அந்த விழாவில் அணிந்துள்ளார்.
இதன் காரணமாக மற்றுமொரு ஜவஹர்லால் நேருவாக, மோடியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்களின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு மன்னார், எருக்கலம்பிட்டியில் ஏற்பாடு செய்த  விழா'வின் இறுதி நாளான கடந்த 26 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை, இந்த ஆடைக்கு சமமான ஆடை ஒன்றையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தப்பா கமாலுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அணிந்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மற்றுமொரு மோடியாக மாறி வருகின்றார்களா என பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top