ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் கோத்தபாய
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்னிலையாகி உள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிக்கும் வகையில் கோத்தபாய இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த நிறுவனங்களின் பணிப்பாளர்களில் ஒருவராக கோத்தபாய ராஜபக்ஸ கடயைமாற்றியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக இன்றைய தினம் ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோத்தபாயவிற்கு ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழு, அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையிலேயே கோத்தா இன்று முன்னிலையாகி உள்ளார். இவருடன் முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி
அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்
முன்னிலையாகி உள்ளார்கள்.
0 comments:
Post a Comment