மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி
பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம்
மஹியங்கனையில்
இருந்து நாவலபிட்டி
பகுதியை நோக்கி
பயணித்த வான்
ஒன்று வீதியை
விட்டு விலகி
குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர்
காயமடைந்துள்ளனர்.
குறித்த
சம்பவம் உலப்பனை
முஸ்லிம் பாடசாலைக்கு
அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில்
காயமடைந்தவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வீடு
திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையில்
இருந்து நாவலபிட்டி
பகுதியை நோக்கி
பயணித்த வான்
ஒன்று நாவலபிட்டி
கம்பளை பிரதான
வீதியின் உலப்பனை
பகுதியில் பிரதான
வீதியை விட்டு
விலகி குடியிருப்பு
ஒன்றின் மீது
குடைசாய்ந்தத்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த
வான் வண்டியில்
பயணித்தவர்கள் நாவலபிட்டி கலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள்
எனவும், மஹியங்கனை
பகுதியில் வழிப்பாடு
ஒன்றுக்கு சென்று
மீண்டும் வீடு
திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது,
வான் வண்டியில்
அதிகமாக சிறுவர்களே
பயணித்துள்ளதாகவும், குடைசாய்ந்த பகுதியில்
உள்ள வீடு
பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வான்
வண்டியும் சேதமடைந்துள்ளதாக
கம்பளை பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
வான்
சாரதிக்கு ஏற்பட்ட
தூக்க கலக்கம்
காரணமாக இந்த
விபத்து நேர்ந்துள்ளதாக
கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
கம்பளை பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.