கலகொடஅத்தே
ஞானசார தேரரை
சிறைச்சாலை
வைத்தியசாலைக்கு
அழைத்து செல்ல நடவடிக்கை
நீதிமன்றத்தை
அவமதித்த குற்றச்சாட்டின்
பேரில், 6 வருட
கடூழியச் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா
அமைப்பின் பொதுச்
செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை,
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
ஜயவர்தனபுர
வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், அங்கு
அவருக்கான சிகிச்சை
நிறைவடைந்துள்ளதையடுத்து,
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அறியவருகிறது.
நீதிமன்ற
தீர்ப்பின் போதும், ஞானசாரர் ஸ்ரீ ஜயவர்தனபுர
வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தார். சிறுநீரகத்தில் இருந்த
கல்லை அகற்றும்
பொருட்டு அவருக்கு
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை
மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.