39ஆவது ஒசுசல கிளை
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு
கல்முனை நகரில் எப்போது?
அரச
மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்
39ஆவது ஒசுசல
கிளை பேராதனை பல்கலைக்கழக
வளாகத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலக்கம்
1157, கெட்டம்பே, பேராதனை என்ற இடத்தில் இந்த
ஒசுசல கிளை
அமைக்கப்பட்டுள்ளது.
அரச
மருந்தகக் கூட்டுத்தாபனம்
இதுவரையில் 38 ஒசுசல விற்பனை கிளைகளை நடத்தி
வருகின்றது. 103 முகவர் ஒசுசல கிளைகளும் கூட்டுத்தாபனத்திற்கு
உட்பட்டுள்ளது. தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும்
ஒசுசல கிளைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்முனை நகரில் ஒசுசல கிளை திறந்து வைப்பது எப்போது என மக்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது நாடுபூராகவும் 360க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மக்கள வங்கியின் கிளைகள் அன்றிருந்த கல்முனைத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி அஹமத் அவர்களின் முயற்சியினாலும் கல்முனை நகரத்தின் முக்கியத்துவம்
கருதியும் 23 ஆவது கிளையாக ஆரம்பத்திலேயே திறந்து வைக்கப்பட்டது.
இதற்குப் பின்னர்தான் காத்தான்குடியில் 65 ஆவது கிளையாகவும்
மட்டக்களப்பில் 75 வது கிளையாகவும் மக்கள்
வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் 63 ஆவது கிளையாகவும் சம்மாந்துறையில்
64 ஆவது கிளையாகவும் மக்கள் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
ஆனால், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்
39ஆவது ஒசுசல கிளை திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கல்முனையில் இன்னும் இதற்கான நடவடிக்கை
எடுக்கப்படவில்லை.
கல்முனை நகரம் முக்கியத்துவம் இல்லாத நகரமாக மாறிவிட்டதா? இல்லை
இப்பிரதேசத்தில் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாத அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கிறார்களா
என கல்முனப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment