திருச்சபைகளில் நடந்த பாலியல் குற்றங்கள்
மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்
அயர்லாந்தில் திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் மீதான பாலியல் குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்காமல் திருச்சபைகள் மேளனமாக இருந்தது வருந்ததக்கது, இதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் ஆண்டவர் 39 ஆண்டுகளுக்கு பின், அயர்லாந்து சென்றுள்ளார். போப் பிரான்சிஸ்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள அவர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கூட்டத்தில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அயர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு ஆளாகியுள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பெரிய அவப் பெயரை ஏற்படுத்தி விட்டன. கத்தோலிக்க திருச்சபைகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. இது என்னை வெட்கப்பட செய்துள்ளது.
இதுபற்றி பேசாமல் தவிர்த்து விட முடியாது. பேராயர்கள், மதகுருக்கள் உள்ளிட்ட திருச்சபை ஊழியர்கள் இதுபோன்ற புகார் எழும்போது சரியான நடவடிக்கை எடுக்காததால் அது மக்களின் கோபத்தை கிளறி விடுகிறது. இதனால் திருச்சபைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதை எண்ணி நான் கவலை கொள்கிறேன். இதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment