கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
வயிற்று வலியால் துடித்த பெண்!
வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண் ஒருவரின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் அடைத்திருந்த சுமார் ஒன்றரை கிலோ நிறையுடைய முடி நவீன சத்திரசிகிச்சை மூலம் அண்மையில் அகற்றப்பட்டுள்ளது.
இந்த சத்திரசிகிச்சை கல்முனை  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் வைத்தியசாலையினுடைய பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மொகமட் சமிம் தனது முகநூல் பக்கத்தினூடாக கருத்து வெளியிட்டுள்ளார்
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
25 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் வித்தியாசமான முறையில் வாந்தி எடுத்த வண்ணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் வயிற்றில் கட்டி போல் தென்பட்டதும் Endoscopy மூலம் இரைப்பை பூராகவும் முடி அடைத்து காணப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது. (அளவு அதிகமென்பதால் Endoscopy மூலம் அகற்ற முடியாது.)
பின்பு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 1.5 கிலோ கிராம் எடையுள்ள முடி (airball) மீட்கப்பட்டது. முடியானது இரைப்பை, முன் சிறுகுடல், சிறு குடல் வடிவில் வடிவமைக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.
இவர் பல நாட்களாக முடியை உட்கொண்டிருக்க வேண்டும். பொதுவாக மிருகங்களுக்கே இவ்வாறான முடி அடைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.
மனிதர்களில் இவ்வாறு முடியை உற்கொண்டு வருவது மிகவும் அரிது. மன நோயாளர்களே இவ்வாறு முடியை உட்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன நோயாளிக்கு அவருடைய இயல்பை மீட்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சரித்திரத்தின் முதல் சத்திர சிகிச்சை இது என்றும் கூறியுள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top