சாய்ந்தமருது மக்களுக்கு என்ன இலாபம்?
சாய்ந்தமருது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் தற்போது மாதாந்த வருமானமாக 284,500 ரூபாவை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதற்கு மேலதிகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நன்கொடையாக வழங்கிய 15 இலடசம் ரூபா நிதியையும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சங்கத்திற்கு 2018 ஆம் ஆண்டில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள 2,இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது மாத்திரமல்லாமல் கட்டடங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் வழங்கிய 14 இலடசத்து 7 ஆயிரம் ரூபா வைப்புப் பணத்தையும் சங்கம் கொண்டுள்ளது.
சாய்ந்தமருது மக்களின் பொதுச் சொத்துக்களை பயன்படுத்தி இப்படி மாதாந்தம் 284,500 ரூபாவை வருமானமாகவும் மேலதிகமாக 15 இலட்சம் ரூபாவை நன்கொடையாகவும் 14 இலடசத்து 7 ஆயிரம் ரூபாவை வைப்பாகவும் நிதி பெற்றுள்ள நிலையில் சாய்ந்தமருது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் சாய்ந்தமருது மக்களுக்கு தற்போது கிடைக்கும் சேவை, இலாபம் மற்றும் நலன்கள்தான் என்ன என்று இச்சங்கத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெவ்வை அவர்களை நாம்
நேரடியாகச் சந்தித்து வினவினோம்.
இதற்கு சங்கத்தின் தலைவர் உதுமாலெவ்வை தெரிவித்த விளக்கம் இவ்வாறு இருந்தது,அதன் விபரம் வருமாறு,
கடந்த 20 வருட காலமாக மூடிக்கிடந்த சாய்ந்தமருது கிராமிய வங்கியை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் அனுமதி பெற்று மீண்டும் இயங்க வைத்துள்ளோம். இதன் மூலம் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அங்கத்தவர்களுக்கு கடன் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 6 வருட காலமாக மூடிக்கிடந்த சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்கத்திற்குச் சொந்தமான அட்டப்பள்ளத்திலுள்ள அரிசி ஆலையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் நன்கொடையாக வழங்கிய 15 இலடசம் ரூபா நிதியைக்கொண்டு மீளப் புனரமைத்து 4 இலட்சம் ரூபா வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு 26 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு கொடுத்துள்ளோம்.
பல வருடங்களாக கட்டையில் இருந்து கொண்டிருந்த சங்கத்திற்குச் சொந்தமான லொறியை திருத்தி மாதாந்த வாடகையாக ( சாரதி, கிளினர் இல்லாமல்) 75 ஆயிரம் ரூபாவுக்கு அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளோம். லொறிக்கு 5 ஆயிரத்திகு உட்பட்ட பழுதுகள் ஏற்படின் அதனை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்கும். இத்தொகைக்கு மேலதிகமாக செலவுகள் மேற்படின் சங்கம் செலவை பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
சாய்ந்தமருது-1ல் உள்ளே ஸ்.எம்.1 களஞ்சியசாலையை கடந்த 2017 ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் அசோக் நிறுவனத்திற்கு 1 இலட்சத்து 60 ஆயிரம் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக 30 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
சாய்ந்தமருது தபாலகத்திற்கு பின்னால் உள்ள கராஜ் கட்டடத்தை 50 ஆயிரம் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக 14 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
சாய்ந்தமருது –
16 ஆம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலைக்கட்டடத்தை 2 இலட்சத்து 97 ஆயிரம் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக 39 ஆயிரத்து 500 ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
தலைமைக் காரியாலயத்திலுள்ள கட்டடங்களை L B FINANCE க்கும் முபாறக் டெக்டைல்ஸ் கிளை நிறுவனமான FASHION GALLERY க்கும் மாதாந்த வாடகைக்கு வழங்கியுள்ளோம்.
முபாறக் டெக்டைல்ஸ் கிளை நிறுவனமான FASHION GALLERYக்கு 5 இலட்சம் ரூபா வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக 55 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்த 5 இலட்சம் ரூபா வைப்புப் பணம் கடந்த இயக்குனர் சபைக் காலத்தில் பெறப்பட்டுள்ளது. அந்தப் பணத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது எங்களுக்கு தெரியாமல் உள்ளது.
L B FINANCE நிற்வனத்திடமிருந்து மாத வாடகையாக 45 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இச்சங்கத்தில் 5
ஊழியர்கள் தற்போது கடமையில் இருக்கிறார்கள். இவர்களின் சம்பளம், மின்சாரம், நீர் மற்றும் நிர்வாகச் செலவுகளாக மாதாந்தம் 1 இலட்சம் செலவாகின்றது.
கடந்த காலத்தில் கடமை செய்த ஊழியர்களின் சென்மதி, சீருடை, இடைக்காலப்படி, நிலுவைச் சம்பளம், பணிக்கொடை என்பனவற்றை வழங்கிக்கொண்டிருக்கின்றோம். இதுவரை சீருடை, இடைக்காலப்படி என்பனவத்திற்காக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 860 ரூபா 22 சதமும் நிலுவைச் சம்பளமாக 62 ஆயிரத்து 576 ரூபா 86 சதமும் பணிக்கொடையாக 1 இலட்சத்து 66 ஆயிரத்து 895 ரூபா 75 சதமும் வழங்கியுள்ளோம். இன்னும் இப்படியாக நிலுவைகள் வழங்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் எஸ்.எம்.4 வளவுக்கும் சாய்ந்தமருது பள்ளிவாசல் பூமிக்கும் இடையிலான பொதுச் சுவரைக் கட்டிக் கொடுத்துள்ளோம்.
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சங்கத்திற்கு 2018 ஆம் ஆண்டில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள 2,இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை தலைமை காரியாலயக் கட்டடத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் 2019 ஜனவரியில் நடைமுறையில் இருக்கும்.
சாய்ந்தமருது மக்கள் வங்கிக் கிளைக்கான நிரந்தர கட்டடம் ஒன்றை சாய்ந்தமருது – 16 ஆம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலைக்கட்டட வளவில் நவீன முறையில் அமைத்து வாடகைக்கு கொடுப்பதற்கு மக்கள் வங்கி முகாமைத்துவத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அரச ஊழியர்களுக்கு கடனடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். இத்திட்டத்தை
2019 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு சங்கத்தின் தலைவர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
"தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது சொத்துக்களின்
சொந்தக்காரர்களான அங்கத்தவர்களான நீங்களே"
காணி, கட்டடம்
|
உறுதி/பேர்மிட் இலக்கமும் திகதியும்
|
பரப்பளவு (சதுர அடி)
|
கட்டடம்
|
மாதாந்தம் பெறும் வாடகை
|
வைப்பு
|
தலைமைக் காரியாலயக் கட்டடங்கள்
|
1882
13.04.1961
|
6943
|
நிரந்தரம்
|
100,000/=
|
500,000/=
|
எஸ்.எம்.3 கராஜ் கட்டடம்
|
18750
14.03.1996
|
19213
|
நிரந்தரம்
|
14,000/=
|
50,000/=
|
எஸ்.எம். 1 களஞ்சிய சாலை
|
16372
23.04.1964
|
17943
|
நிரந்தரம்
|
30,000/=
|
160,000/=
|
எஸ்.எம். 4 அரிசி ஆலைக் கட்டடம்
|
7162
12.01.1957
1000
25.07.1992
|
8590
|
நிரந்தரம்
|
39500/=
|
297,000/=
|
எஸ்.எம்.4 அட்டப்பள்ளம் அரிசி ஆலைக் கட்டடம்
|
4673
20.03.1964
1232
10.04.1995
|
24853
|
நிரந்தரம்
|
26,000/=
|
400,000/=
|
EP- LG 1432 லொறி
|
1432
09.01.2009
|
நிரந்தரம்
|
75,000/=
|
-
| |
மொத்தம்
|
284,500/=
|
1407000/=
|
0 comments:
Post a Comment