வவுனியாவில் 39 பொதுக்கிணறுகளை
ஆழப்படுத்த நடவடிக்கை
மாவட்ட அரச அதிபர் ஐ.எம். ஹனீபா தெரிவிப்பு
வவுனியா
மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில்
உள்ள 39 பொதுக்கிணறுகளை
ஆழப்படுத்த தேசிய அனர்த்த நிவாரண சேவைகள்
நிலையம் ஊடாக
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட
அரச அதிபர்
ஐ.முஹம்மட். ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியா
மாவட்டத்தின் வறட்சி நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில்
இன்று கருத்து
தெரிவித்த போதே
அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின்
பல பகுதிகளில்
வறட்சி ஏற்பட்டுள்ள
நிலையில் வவுனியா
மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின்
பல கிராமங்களில்
குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல
கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்களது
குடிநீர் தேவையை
நிவர்த்தி செய்யும்
முகமாக வவுனியா
மாவட்டத்தில் 39 பொதுக்கிணறுகளை ஆழப்படுத்தும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி
வவுனியா பிரதேச
செயலக பிரிவில்
15, வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில்
07, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில்
10,
வவுனியா
வடக்கு பிரசே
செயலக பிரிவில்
07 பொதுக் கிணறுகளை
ஆழப்படுத்துவதற்கு தேசிய அனர்த்த
நிவாரண சேவைகள்
நிலையத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம். ஹனீபா
மேலும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment