கேரள வெள்ளம்: இந்துக் குடும்பங்களுக்கு அடைக்கலமும் உணவும் அளித்துக் காத்த பள்ளிவாசல்        

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது.

மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்று நிவாரண முகாமானது.

இந்துக் குடும்பங்களுக்கு அடைக்கலமும்
உணவும் அளித்துக் காத்த பள்ளிவாசல்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது.
மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.
வடக்கு மலப்புரத்தில் உள்ள சாலியார் கிராமத்தில் அகம்படத்தில் உள்ள ஜும் ஆப் பள்ளிவாசல் நிவாரண முகாமாகவே மாறிவிட்டது.
17 இந்துக்குடும்பங்கள் தங்கள் உடமைகளை இழந்து பெண்கள், குழந்தைகள் முதியோருடன் சேர்ந்து புலம்பெயர்ந்தோராயினர். இவர்களுக்கு இந்த  பள்ளிவாசல், பள்ளிவாசலின் உள்ளேயே உறங்க இடம் கொடுத்துள்ளதோடு தங்கல் சமையலறையில் சமைத்த உணவையும் அளித்துள்ளது, மேலும் இவர்கள் வீடு திரும்பும்போது அரிசி, மற்றும் பிற தானியங்களை கொடுத்தும் உதவியுள்ளது.
சுமார் 78 பேருக்கு ஜும்ஆப் பள்ளிவாசல் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியதில் பெரும்பகுதியினர் இந்துக்களே என்று சாலியர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பி.டி.உஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையெ வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு முஸ்லிம் குழுக்கள் இந்துக் கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் உதவியுள்ளனர்.
வயநாடு வென்னியோடில் உள்ள விஷ்ணு ஆலயம் மற்றும் ஐயப்பக் கடவுள் ஆலயம் ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கின, இவற்றைச் சுத்தம் செய்யும் பணிகளில் இரு முஸ்லிம் குழுக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் கோயிலில் சுத்தம் செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உ

ணவும் அளித்துக் காத்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top