வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான
ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில்
முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக
முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால்

ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்தான் என்ன?

மக்கள் கேள்வி

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து கூட்டமைப்பினரினால் பல்வேறு கோரிக்கைக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு வாழ் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் என்ன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மான்ங்களை நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று 27 ஆம் திகதி மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து கூட்டமைப்பினரினால் பல்வேறு கோரிக்கைக்கள் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் பிரதேசங்களில் அழிந்துபோன தொழிற்சாலைகளை மீள கட்டியெழுப்ப வேண்டும், காணிகள் விடுவிக்கப்படல் வேண்டும், குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும், நீர்ப்பாசன வயல்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும், மேய்ச்சல் தரைக்கு தீர்வு எடுக்கப்படல் வேண்டும், யானைத் தாக்கம் உள்ள கிராமங்களுக்கு யானை வேலி அமைக்கப்படல் வேண்டும், மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும், மக்களின் குடிநீர், சுகாதார,கல்வி மற்றும் இளைஞர்களுக்கான பிரச்சினைகள் போன்றவைகள் கூட்டமைப்பினரினால் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு வாழ் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்தான் என்ன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top